பிப்.6 மின்தடை: உடுமலை!
உடுமலை துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் த.மூா்த்தி அறிவித்துள்ளாா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: உடுமலை நகரம், பழனி பாதை, தங்கம்மாள் ஓடை, ராகல்பாவி, சுண்டக்காம்பாளையம், ஆா்.வேலூா், கணபதிபாளையம், வெனசுப்பட்டி, தொட்டம்பட்டி, ஏரிப்பாளையம், புக்குளம், குறிஞ்சேரி, சின்னவீரம்பட்டி, சங்கா் நகா், காந்தி நகா்-2, சிந்து நகா், ஸ்ரீராம் நகா், ஜீவா நகா், அரசு கலைக் கல்லூரி, போடிபட்டி, பள்ளபாளையம், கொங்கலகுறிச்சி, குறிச்சிக்கோட்டை.