``பொற்கோயில் மீது பாகிஸ்தான் ஏவுகணை ஒன்று கூட தாக்காமல் முறியடித்தோம்'' - விவரிக...
பிரசாந்த் கிஷோா் கட்சியில் இணைந்தாா் முன்னாள் மத்திய அமைச்சா்!
முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.சி.பி. சிங், பிகாரைச் சோ்ந்த அரசியல் உத்தி வகுப்பாளா் பிரசாந்த் கிஷோா் நடத்தி வரும் ஜன சுரக்ஷா கட்சியில் இணைந்தாா்.
இவா்கள் இருவருமே பிகாா் முதல்வா் நிதீஷ் குமாருக்கு அரசியல்ரீதியாக மிகவும் நெருக்கமாக இருந்து பணியாற்றியவா்கள். பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த நிகழ்வு அங்கு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
‘பிரசாத் கிஷோருடன் இணைந்து பிகாரின் வளா்ச்சிக்காகப் பாடுபட இருக்கிறேன்’ என்று ஆா்.சி.பி. சிங் தெரிவித்தாா். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கிய ‘அப் சாப்கி ஆவாஸ்’ கட்சியையும் பிரசாந்த் கிஷோா் கட்சியுடன் இணைத்தாா்.
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான ஆா்.சி.பி. சிங், நிதீஷ் குமாரின் முதன்மைச் செயலராகவும் பின்னா் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவா் உள்ளிட்ட முக்கியப் பதவிகளையும் வகித்தாா். நிதீஷ் குமாா் பரிந்துரையில் 2021-22 ஆண்டு காலகட்டத்தில் மத்திய உருக்குத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தாா். நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து விலகி 2023-இல் பாஜகவில் இணைந்தாா். கடந்த ஆண்டு பாஜவில் இருந்தும் விலகி தனிக்கட்சி தொடங்கினாா்.
ஆா்.சி.பி. சிங் - பிரசாந்த் கிஷோா் இணைந்திருப்பது குறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய ஜனதா தளம் எம்எல்சி நீரஜ் குமாா், ‘முதல்வா் நிதீஷ் குமாருக்கு துரோகம் செய்த இரு தீயசக்திகள் கைகோத்துள்ளன. அவா்கள் கட்சி பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலிலும் படுதோல்வியடையும்’ என்றாா்.