செய்திகள் :

பிரதமரிடம் 3 கோரிக்கைகள் வைத்த இபிஎஸ்! என்னென்ன?

post image

தமிழகம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடியிடம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை மனு அளித்தார்.

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமா் நரேந்திர மோடி தூத்துக்குடி நிகழ்வை முடித்துக் கொண்டு திருச்சி விமான நிலையத்துக்கு சனிக்கிழமை இரவு 10.05 மணிக்கு வந்தார்.

விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு அரசு சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் விமான நிலையத்தில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, 3 கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி அளித்தார்.

அவர் அளித்த கோரிக்கைகளாக,

விவசாயிகளுக்கான கடன் வழங்கும் செயல்முறையில் சிபில் ஸ்கோர் கேட்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

தமிழகத்தில் ராணுவ தளவாட உற்பத்திக்கு வழிவகுக்கும் வழித்தடத்தை சென்னை, கோவை, ஒசூர், சேலம், திருச்சியை இணைத்து செயல்படுத்த வேண்டும்.

கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து, உடனடியாக செயல்படுத்த வேண்டும் உள்ளிட்டவற்றை மனுவாக சமர்ப்பித்தார். எடப்பாடி பழனிசாமி அளித்த கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி, அதனைப் பரிசீலித்து ஆவண செய்வதாக உறுதியளித்துள்ளார்.

மேலும், அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் திருக்கோயில் வளாகத்தில் இன்று (ஜூலை 27) நடைபெறும் முதலாம் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றவுள்ளார்.

இதையும் படிக்க:சொல்லப் போனால்... ஏன், எதற்காக? சொல்லுங்கள் தன்கர்ஜி!

ADMK General Secretary EPS submits petition to PM Modi

தில்லி புறப்பட்டார் பிரதமர் மோடி

திருச்சியில் இருந்து தனி விமானத்தில் பிரதமர் மோடி தில்லி புறப்பட்டார். மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி சனிக்கிழமை இரவு தமிழகம் வந்தடைந்தார். அவரை விமான நிலையத்தில் ஆளுநர்... மேலும் பார்க்க

சிவ பக்தியில் மூழ்கடித்த இளையராஜா..! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

கங்கை கொண்ட சோழபுரத்தில் இசை நிகழ்ச்சி நடத்திய இளையாராவை பிரதம் மோடி மிகவும் பாராட்டி பேசியுள்ளார். கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவின் நிறைவு நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. இந்த ந... மேலும் பார்க்க

ராஜராஜனுக்கும் ராஜேந்திரனுக்கும் சிலை: பிரதமர் மோடி அறிவிப்பு

தமிழகத்தில் ராஜராஜனுக்கும் ராஜேந்திரனுக்கும் சிலை நிறுவப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ராஜேந்திர சோழனின் 1,005-ஆவது பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்ட... மேலும் பார்க்க

ராஜேந்திர சோழனின் நினைவு நாணயம் வெளியீடு

ஆடி திருவாதிரை விழாவில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். ராஜேந்திர சோழனின் 1,005-ஆவது பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக... மேலும் பார்க்க

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் கருவறையான பெருவுடையார் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி தீபாராதனை காட்டி சாமி தரிசனம் செய்தார். கோயிலில் திருவாசகம் பாட, தமிழில் வழிபாடு நடத்தினார். கோயிலில் சிவாச்சாரியார்க... மேலும் பார்க்க

சோழர்களின் பெருமைகளைக் கேட்டறிந்த மோடி!

கங்கை கொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயில் வளாகத்தில் தேவார திருவாசக பதிகங்கள் பாடி ஓதுவார்கள் பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர். கோயில் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்த... மேலும் பார்க்க