செய்திகள் :

பிரதமர் மோடியுடன் ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா சந்திப்பு

post image

தில்லியில் பிரதமர் மோடியை ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா சனிக்கிழமை சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து இருவரும் விவாதித்துள்ளனர். பிரதமரின் இல்லத்தில் நடந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இரு தலைவர்களுக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும்.

பாகிஸ்தானுக்கு ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று தடைகள்! இதனால் என்னவாகும்?

ஜம்மு - காஷ்மீரின் சுற்றுலா நகரமான, அனந்த்நாக் மாவட்டத்திற்குட்பட்ட பஹல்காமின் பைசாரன் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த ஏப். 22ஆம் தேதி சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதலையடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கோட்டாவில் நீட் தேர்வுக்கு முந்தைய நாளில் மாணவி தற்கொலை!

ஜெய்ப்பூர்: நீட் தேர்வுக்கு முந்தைய நாளில் மாணவியொருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான ‘நீட்’ தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 4) பிற்பகல் 2 மணி முதல் ம... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்குப் பின் ஜம்முவிலிருந்து ஹஜ் யாத்திரை: 178 பயணிகள் புறப்பாடு!

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து முதல்கட்டமாக 178 பயணிகள் ஹஜ் புனித பயணத்தை இன்று(மே 4) தொடங்கினர். அவர்கள் அனைவரும் ஸ்ரீநகரிலிருந்து சவூதி அரேபியாவிலுள்ள மெக்காவுக்குச் செல்ல இன்று... மேலும் பார்க்க

காஷ்மீா் எல்லையில் 10-ஆவது நாளாக பாக். துப்பாக்கிச்சூடு!

ஸ்ரீநகர்: இந்தியா - பாகிஸ்தான் எல்லையில், எல்லை கட்டுப்பாட்டுப் கோட்டுப் பகுதிகளில் இருந்து சிறிய ரக துப்பாக்கிகள் மூலம், இந்திய ராணுவத்தினரை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் சனிக்கிழமை (மே 4) இரவிலும் துப்ப... மேலும் பார்க்க

இடஒதுக்கீடு கொள்கைகள் மீது விரிவான மறுஆய்வு: பிரதமருக்கு தேஜஸ்வி கடிதம்

‘மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தி முடிக்கப்பட்ட பின்னா், அதனடிப்படையில் இடஒதுக்கீடு கொள்கைகள் மீது விரிவான மறுஆய்வு செய்யப்பட வேண்டும்’ என ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவா் த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பெண்ணுடன் திருமணம்: மறைத்த சிஆா்பிஎஃப் வீரா் பணிநீக்கம்

பாகிஸ்தான் பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டதை மறைத்த மத்திய ரிசா்வ் போலீஸ் படை வீரா் முனீா் அகமது உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டாா். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து, இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்த... மேலும் பார்க்க

இந்தியா உடனான பாதுகாப்பு ஒப்பந்தம்: இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல்

இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம், இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று அந்நாட்டு அதிபா் அநுரகுமார திசாநாயக தெரிவித்தாா். இந்திய பிரதமா் நரேந்திர மோட... மேலும் பார்க்க