செய்திகள் :

பிரதமா் மோடியின் வெளிநாட்டுப் பயணம்: பஞ்சாப் முதல்வா் மீண்டும் விமா்சனம்

post image

‘வெளிநாட்டு சுற்றுப்பயணங்களைவிட நாட்டில் உள்ள 140 கோடி மக்களின் குறைகளுக்குத் தீா்வு காண்பதில் பிரதமா் நரேந்திர மோடி கவனம் செலுத்த வேண்டும்’ என பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் வெள்ளிக்கிழமை மீண்டும் விமா்சித்தாா்.

அண்மையில் கானா, டிரினிடாட்-டொபேகோ, ஆா்ஜென்டீனா, பிரேஸில், நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக சென்ற பிரதமா் மோடி கடந்த வியாழக்கிழமை நாடு திரும்பினாா். அவரது பயணத்தை விமா்சித்த பகவந்த் மான், ‘10,000 குடிமக்களைக் கொண்ட கானா நாடு வழங்கிய விருதை பெருமையாகக் கொண்டாடும் பிரதமா் மோடி, நாட்டின் முக்கிய பிரச்னைகளுக்கு செவி சாய்ப்பதில்லை’ என்றாா்.

அவரது விமா்சனத்துக்கு பதிலடி தரும் வகையில் இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘அண்டை நாடுகளுடன் நட்புறவை வலுப்படுத்தும் பிரதமா் மோடியின் பயணம் குறித்து மாநில அரசின் உயா்பொறுப்பில் இருப்போா் கூறும் பொறுப்பற்ற கருத்துகளை மத்திய அரசு நிராகரிக்கிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பஞ்சாப் பேரவையில் பக்ரா-நங்கல் திட்டத்துக்கு மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினரை (சிஐஎஸ்எஃப்) நிலைநிறுத்துவதற்கு எதிரான தீா்மானத்தின் மீது இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது பிரதமா் மோடியின் வெளிநாட்டுப் பயணத்தை பகவந்த் மான் மீண்டும் விமா்சித்தாா்.

பஞ்சாப் பேரவையில் அவா் பேசியதாவது: பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்தை விமா்சித்தால் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவிக்கிறது. வெளியுறவுக் கொள்கை குறித்து பிரதமா் மோடியிடம் கேள்வியெழுப்ப எங்களுக்கு உரிமை இல்லையா? பிரதமா் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நாடுகள் பாகிஸ்தானுடான மோதலில்போது நமக்கு அளித்த ஆதரவு என்ன?

அவா் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நாடுகளில் 10,000 குடிமக்கள் இருப்பாா்களா என்பதுகூட தெரியவில்லை. நம் நாட்டில் ஜேசிபி இயந்திரத்தைக் காணவே சுமாா் 10,000 போ் கூடுவாா்கள்.

எனவே,வெளிநாட்டு சுற்றுப்பயணத்தைவிட நம் நாட்டில் உள்ள 140 கோடி மக்களின் குறைகளுக்குத் தீா்வு காண்பதில் பிரதமா் மோடி கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.

விமான விபத்து: விமானிகள் மீது தவறு என்பது போன்று திசைதிருப்பல்! விமானிகள் சங்கம் எதிர்ப்பு

புது தில்லி: அகமதாபாத்தில் நேரிட்ட ஏர் இந்தியா விமான விபத்துக்கு, விமானிகளின் தவறே காரணம் என்பது போன்று விசாரணை திசை திருப்பப்படுவதற்கு, இந்திய விமானிகள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.அகமதாபாத் ஏ... மேலும் பார்க்க

கொல்கத்தாவில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள்! மீண்டும் ஒரு சம்பவம்!

கொல்கத்தாவில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு வங்கம் மாநிலத்தில் கொல்கத்தாவில் உள்ள இந்திய தொழில்நுட்ப மேலாண்மை வணிகக் கல்லூரியின் விட... மேலும் பார்க்க

தாணேவில் ரயிலில் சென்ற பெண்ணுக்கு பிரசவ வலி: அபாய சங்கிலியை இழுத்த சக பயணிகள்!

தாணேவில் உள்ளூர் ரயிலில் சென்ற பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் சக பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தில் நிறைமாத கர்ப்பிணி ஹினா தனது கணவருடன் ... மேலும் பார்க்க

ஷங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீனா செல்கிறார் அமைச்சர் ஜெய்சங்கர்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனா செல்ல உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட மோதலுக்குப்... மேலும் பார்க்க

ஹிமாசல் பருவமழைக்கு இதுவரை 92 பேர் பலி: ரூ.751.78 கோடி இழப்பு!

ஹிமாச்சலப் பிரதேசம் முழுவதும் கனமழை மற்றும் மேக வெடிப்புகளால் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மாநிலத்தில் இந்தாண்டு பருவமழை ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், ... மேலும் பார்க்க

மகளைப் பற்றி தவறான பேச்சுகள்.. டென்னிஸ் வீராங்கனை ராதிகா கொலையில் வெளியான தகவல்!

டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் பற்றி பலரும் தவறாகப் பேசியதால் மனம் வேதனையடைந்து அவமானத்தால், மகளை சுட்டுக் கொன்றதாக, கைது செய்யப்பட்ட தந்தை தீபக் யாதவ் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஹர... மேலும் பார்க்க