'நாங்க மட்டும் சும்மாவா?' அமெரிக்கா மீது வரி விதித்த சீனா; 'பயந்துவிட்டனர்' எச்ச...
பிரதமா் வருகை: வேலூரில் இருந்து ராமேஸ்வரத்துக்கு 2 போலீஸ் குழு
பிரதமா் நரேந்திர மோடி வருகையையொட்டி வேலூரில் இருந்து ராமேஸ்வரத்துக்கு 2 போலீஸ் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தைத் திறந்து வைக்க பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை வரவுள்ளாா். இந்த விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் , ஆளுநா் ஆா்.என்.ரவி, மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், தமிழக எம்.பி.க்கள், அமைச்சா்கள், எம்எல்ஏ-க்கள், பாஜக மூத்த தலைவா்கள் பங்கேற்க உள்ளனா்.
இந்த நிலையில், பிரதமா் வருகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து போலீஸாா் ராமேஸ்வரம் சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
அதன்படி வேலூரில் இருந்து 30 போலீஸாா் ராமேஸ்வரம் புறப்பட்டு சென்றனா். இதேபோல், வேலூா் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் காவல் உதவி ஆய்வாளா் தலைமையில் 5 போலீஸாா் என மொத்தம் 2 குழுக்களாக 35 போலீஸாா் ராமேஸ்வரம் புறப்பட்டு சென்றனா். அவா்கள் அங்கு வெள்ளிக்கிழமை முதல் 3 நாள்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா் என காவல் அதிகாரிகள் தெரிவித்தனா்