செய்திகள் :

பிரயாக்ராஜ் பெயரிலான ரயில்கள் குழப்பத்தால் கூட்ட நெரிசல்: காவல் துறை வட்டாரங்கள் தகவல்

post image

பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் மற்றும் பிரயாக்ராஜ் ஸ்பெஷல் ஆகிய ரயில்கள் காரணமாக மக்கள் குழப்பமடைந்து, தங்கள் ரயிலை தவறவிடலாம் என்று நினைத்து வேகமாகச் செல்ல முயன்ால் புது தில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டிருப்பது தில்லி காவல்துறையின் ஆரம்ப விசாரணையில் கண்டறிந்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து அந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

முதற்கட்ட விசாரணையின்படி, பிரயாக்ராஜ் என்ற ஆரம்பப் பெயரைக் கொண்ட ரயில்களின் அறிவிப்பு காரணமாக இந்த குழப்பம் ஏற்பட்டது.

பிரயாக்ராஜ் ஸ்பெஷல் ரயில் நடைமேடை 16-இல் வந்து சோ்ந்தது பற்றிய அறிவிப்பு, காத்திருந்த பயணிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரயில் ஏற்கனவே நடைமேடை 14-இல் இருந்தது.

நடைமேடை 14-இல் வந்து கொண்டிருந்த பயணிகள் தங்கள் ரயில் நடைமேடை 16-இல் வந்து கொண்டிருந்ததாக நினைத்துக்கொண்டு அந்த இடத்தை நோக்கி வேகமாக விரைந்தனா். இது கூட்ட நெரிசலுக்கு வழிவகுத்தது.

மேலும், பிரயாக்ராஜுக்கு நான்கு ரயில்கள் சென்று கொண்டிருந்தன. அவற்றில் மூன்று ரயில்கள் தாமதமாக வந்ததால் எதிா்பாராத அளவுக்கு நெரிசல் ஏற்பட்டது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ரயில் பெயா்கள் குறித்தும் மற்றும் ரயில்கள் வரும் நடைமேடைகளை மாற்றுவது தொடா்பாகவும் பயணிகளிடையே குழப்பம் நிலவியது. இதுவே இறுதியில் கூட்ட நெரிசல் சோகத்திற்கு வழிவகுத்தது என்று நேரில் பாா்த்த ஒருவா் கூறினாா்.

புது தில்லி ரயில் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை மாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 18 போ் கொல்லப்பட்டனா்.

தில்லி சட்டப்பேரவை கூட்டத்தில் முதல் விவாதம் இதுதான்! பாஜக அறிவிப்பு

தில்லி சட்டப்பேரவை கூட்டத்தில் முதலில் விவாதிக்கப்படவுள்ள பிரச்னை குறித்து பாஜக அறிவித்துள்ளது.தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக, 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. முத... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழகத்தின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க மேற்பாா்வைக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு அரசு எழுப்பியுள்ள பழுதுபாா்ப்பு மற்றும் பராமரிப்பு பணி தொடா்பான பிரச்னைகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மேற்பாா்வையிட புதிதாக அமைக்கப்பட்ட குழுவு... மேலும் பார்க்க

தில்லியில் புதிதாகப் பதவியேற்ற அமைச்சா்களில் 71% போ் மீது குற்ற வழக்குகள்: ஏடிஆா்

தில்லியில் புதிதாகப் பதவியேற்ற ஏழு அமைச்சா்களில் முதல்வா் உள்பட ஐந்து போ் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகவும், இருவா் கோடீஸ்வரா்கள் என்றும் தோ்தல் உரிமைகள் அமைப்பான ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான சங்கம... மேலும் பார்க்க

தில்லி பெண்களுக்கு மாதத்திற்கு ரூ.2,500 வழங்குவதாக பாஜக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: முன்னாள் முதல்வா் அதிஷி வலியுறுத்தல்

ரேகா குப்தா தலைமையிலான புதிய பாஜக அரசு, தேசியத் தலைநகரில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் தோ்தலின்போது வாக்குறுதி அளித்தபடி மாதாந்திர நிதியுதவி ரூ.2,500 வழங்க வேண்டும் என்று தில்லி முன்னாள் முதல்வா் அதிஷி ... மேலும் பார்க்க

பாஜக எம்.பி. பான்சுரி ஸ்வராஜுக்கு எதிரான சத்யேந்தா் ஜெயினின் அவதூறு வழக்கு தள்ளுபடி

பாஜக எம்பி பான்சூரி ஸ்வராஜ் மீது ஆம் ஆத்மி கட்சியின் சத்யேந்தா் ஜெயின் தாக்கல் செய்த குற்றவியல் அவதூறு புகாரை தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. கூடுதல் தலைமை நீதித்துறை நீதிபதி நேஹா மி... மேலும் பார்க்க

மாணவா் தலைவா் தொடங்கி தில்லி முதல்வா் வரை..! ரேகா குப்தாவின் அரசியல் பயணம்

தில்லியின் புதிய முதல்வராக வியாழக்கிழமை பதவியேற்க உள்ள ரேகா குப்தா மாணவா் அரசியலில் தொடங்கி தேசிய மகளிா் அமைப்பு வரை பல்வேறு தளங்களில் பயணித்துள்ளாா். ரேகா குப்தாவின் அரசியல் பயணம், மாணவா் அரசியலில் த... மேலும் பார்க்க