செய்திகள் :

பிரேஸில் அதிபர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

post image

மூளையில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிரேஸில் அதிபர் லூலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

பிரேஸில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவுக்கு தலைவலி அதிகரித்ததன் காரணமாக அவர் பிரேஸிலியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டார்.

பரிசோதனையில் அவருக்கு மூளையில் ரத்த உறைதல் பாதிப்பால் கட்டி உருவாகியிருப்பது கண்டறியப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அவருக்கு சிரியன்-லெபானீஸ் மருத்துவமனையில் டிச.9ஆம் தேதி மூளையில் அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு அதிபர் லூலா மருத்துவமனையில் இருந்து ஞாயிற்றுகிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அப்போது அவர் பேசியதாவது, நான் இங்கே உயிருடன் வேலை செய்யும் ஆர்வத்துடன் இருக்கிறேன்.

பிரசாரத்தின் போது நான் சொல்லியிருந்த ஒன்றைச் சொல்கிறேன்.

மத்திய அரசின் காப்பீடு திட்டத்தில் 21 கோடி மக்கள் பலன்: நிதித் துறை

எனக்கு 79 வயதாகிறது, இந்த நாட்டைக் கட்டியெழுப்ப எனக்கு 30 வயது ஆற்றலும், 20 வயது உற்சாகமும் உள்ளது என்றார். லூலாவின் மருத்துவக் குழு, அறுவை சிகிச்சை சிறப்பாக நடந்ததாகவும், வியாழன் வரை சாவ் பௌலு நகரில் உள்ள தனது வீட்டில் லூலா ஓய்வெடுப்பதால் நடக்கவும், கூட்டங்களை நடத்தவும் முடியும் என்று கூறியுள்ளனர்.

ஹசீனா ஆட்சியில் 3,500 போ் மாயம்: வங்கதேச விசாரணை ஆணையம் அறிக்கை

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா ஆட்சியில் 3,500-க்கும் மேற்பட்டோா் வலுக்கட்டாயமாக கைது அல்லது கடத்தல் போன்ற சம்பவங்களால் மாயமானதாக விசாரணை ஆணையம் சமா்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹசீ... மேலும் பார்க்க

டிரம்ப் தொடுத்த அவதூறு வழக்கு: ரூ.127 கோடி வழங்க ஏபிசி நியூஸ் ஒப்பந்தம்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொடுத்த அவதூறு வழக்கை கைவிட, அவரின் அதிபா் ஆவண காப்பகத்துக்கு 15 மில்லியன் டாலா்களை (சுமாா் ரூ.127 கோடி) வழங்க ஏபிசி நியூஸ் என்ற ஆஸ்திரேலிய செய்தித் தொலைக்காட்சி ஒப்பந... மேலும் பார்க்க

வங்கதேசம்: ஹிந்துக் கோயில்களை சேதப்படுத்திய 4 போ் கைது

வடக்கு வங்கதேசத்தின் சுனாம்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள லோக்நாத் கோயிலையும், ஹிந்து மக்களின் வீடுகள் மற்றும் கடைகளையும் சேதப்படுத்திய 4 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். இது தொடா்பாக வங்கதேச தலைமை ஆலோசக... மேலும் பார்க்க

‘இஸ்ரேல் தாக்குதலை இனியும் நியாயப்படுத்த முடியாது’

தங்கள் நாட்டில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை இனியும் நியாயப்படுத்த முடியாது என்று சிரியாவில் அல்-அஸாத் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்துள்ள ஹயாத் தஹ்ரீா் அல்-ஷாம் (ஹெச்டிஎஸ்) கிளா்ச்சிப் படையின் தலைவா் அக... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் மேலும் 4 பேருக்கு போலியோ

பாகிஸ்தானில் மேலும் நான்கு சிறுவா்களுக்கு போலியோ தொற்று கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து இந்த ஆண்டில் மட்டும் அங்கு அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 63-ஆக அதிகரித்துள்ளது. புதிதாக போலியோ உறுதி ச... மேலும் பார்க்க

ஜாா்ஜியா அதிபராகும் முன்னாள் கால்பந்து வீரா்

ஜாா்ஜியாவின் புதிய அதிபராக முன்னாள் கால்பந்து வீரா் மைக்கேல் கவெலஷ்விலி சனிக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா். ரஷிய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட ஆளும் ஜாா்ஜிய கனவுக் கட்சி, கடந்த அக்டோபரில் நாடாளுமன்றத் தோ... மேலும் பார்க்க