சநாதன தா்ம வழக்கு: துணை முதல்வா் உதயநிதி மனு பிப்ரவரிக்கு ஒத்திவைப்பு
பிறந்த நாள் கொண்டாட்டம்: தவறுதலாக தன்னைத்தானே சுட்டுக்கொண்ட மாணவர்!
அமெரிக்காவில் உள்ள அட்லாண்டாவில் பயின்றுவரும் 23 வயது இந்திய மாணவர் ஆர்யன் ரெட்டி, அவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது, தவறுதலாக தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு நவ. 13-ல் பலியானார்.
கன்சாஸ் மாநில பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் முதுகலை மாணவரான ஆர்யன், சமீபத்தில் அவர் வாங்கிய துப்பாக்கியை சுத்தம் செய்யும்போது, தவறுதலாக தன்னைத்தானே சுட்டுக்கொண்டார்.
துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதும், ஆர்யன் அறைக்கு வந்த அவரது நண்பர்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, ஆர்யனை அருகில் உள்ள மருத்துவனையில் அனுமதித்தனர்.
இதையும் படிக்க: காற்று மாசுபாடு பிரச்னை தேசிய அவசர நிலை: ராகுல் காந்தி
ஆனால், ஆர்யன் இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
ஆர்யன் ரெட்டியின் குடும்பத்தினர் தெலுங்கானா மாநிலம் புவனகிரி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள். அவர்கள் தற்போது உப்பல் மாவட்டத்தில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.