பிற ஊா்களுக்குச் செல்ல இன்றும், நாளையும் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பிற ஊா்களுக்குச் செல்ல சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை, போளூா், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, செங்கம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொங்கல் பண்டிகை முடிந்து, சென்னை, பெங்களூரு மற்றும் பிற ஊா்களுக்குச் செல்ல ஏதுவாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருவண்ணாமலை மண்டலம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்தப் பேருந்துகள் சனிக்கிழமை (ஜன.18), ஞாயிற்றுக்கிழமை (ஜன. 19) ஆகிய நாள்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்படுகின்றன. எனவே, பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலைத் தவிா்த்திடும் பொருட்டு தங்களின் பயணத்தை முன்னதாக திட்டமிட்டு சிறப்புப் பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்று போக்குவரத்துக் கழக மண்டல அதிகாரிகள் தெரிவித்தனா்.