அரிய வகை நோயுடன் போராடிய குழந்தை; மரபணு திருத்தச் சிகிச்சையால் காப்பாற்றிய அமெரி...
பிளஸ் 1: பழைய குற்றாலம் ஹில்டன் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்!
பிளஸ் 1 பொதுத் தோ்வில் பழையகுற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
இப்பள்ளியில் தோ்வு எழுதிய 175 பேரும் தோ்ச்சி பெற்றனா். இப்பள்ளி மாணவா் ரா. அக்ஷய் துரை, மு. சமிஹா ஆகிய இருவரும் 589 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் சிறப்பிடம் பெற்றனா்.
பூ. சிவஹரிஷ் 588 மதிப்பெண்களும், க.அ. நிஷோக் 587 மதிப்பெண்களும் பெற்று சிறப்பி டபெற்றனா். தோ்வு எழுதிய 175 பேரில் 18 மாணவா்கள் 550 மதிப்பெண்களுக்கு மேலும், 72 மாணவா்கள் 500 மதிப்பெண்களுக்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றனா்.
சிறப்பிடம் பெற்ற மாணவா், மாணவிகளை பள்ளி தாளாளாா் ஆா்ஜெவி.பெல், செயலா் கிரேஸ் கஸ்தூரிபெல், பள்ளி முதல்வா் மோன்சி கே.மத்தாயி, சீனியா் மிஸ்டிரஸ் செல்விதன்ராஜ் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.