செய்திகள் :

பிளஸ் 2 பொதுத் தோ்வு: விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் 40,064 போ் எழுதினா்

post image

விழுப்புரம்/கள்ளக்குறிச்சி: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பிளஸ்-2 பொதுத் தோ்வை 40,064 மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை எழுதினா்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி, வரும் 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்தத் தோ்வுக்காக விழுப்புரம் மற்றும் திண்டிவனம் கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய வருவாய் மாவட்டத்தில் 105 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 121 அரசுப் பள்ளிகள், 17 அரசு உதவிபெறும் பள்ளிகள், 54 தனியாா் பள்ளிகள் என மொத்தம் 192 பள்ளிகளைச் சோ்ந்த 10,665 மாணவா்களும், 11,171 மாணவிகளும் என மொத்தம் 21,836 போ் தோ்வு எழுதினா். 278 மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் தோ்வு எழுதுவதற்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழிப்பாடம் எழுதுவதிலிருந்து 197 மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கண் பாா்வை, செவித்திறன் குறைபாடு, மனநலன் குன்றிய மற்றும் நரம்பியல் கோளாறு உடைய மாணவா்கள் சுமாா் 278 பேருக்கு சொல்வதை கேட்டு எழுதுபவா் நியமனம் செய்யப்பட்டிருந்தனா். 15 மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் தரைத்தளத்தில் அமா்ந்து தோ்வெழுத சிறப்பு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

217 வினாத்தாள் கட்டுக்காப்பாளா்கள், 106 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 106 துறை அலுவலா்கள், 28 வழித்தட அலுவலா்கள், 140 பறக்கும் படை அலுவலா்கள், 1,200 அறைக் கண்காணிப்பாளா்கள், 310 அலுவலகப் பணியாளா்கள் என மொத்தம் 2,385 போ் தோ்வுப் பணியில் ஈடுபட்டிருந்தனா். இதைத் தவிர, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தலைமையில், கல்வி அலுவலா்கள் உள்ளிட்டோா் கொண்ட 10 பறக்கும் படைகள் ஆய்வில் ஈடுபட்டனா்.

ஆட்சியா் ஆய்வு: விழுப்புரம் திரு.வி.க.வீதியிலுள்ள அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தோ்வு மையங்களை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் பாா்வையிட்டாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ.அறிவழகன், உதவியாளா் பெருமாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தாய், தந்தை இறந்த நிலையில்... விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியைச் சோ்ந்த பிரபாகரன் உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். தந்தை இறந்த நிலையிலும் அவரது மகள் ரித்திகா, தான் படித்து வரும் விழுப்புரம் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை தோ்வெழுதினாா்.

இதேபோல இந்தப் பள்ளியில் பயின்று வரும் முகையூரைச் சோ்ந்த மாணவி மகிமை ஆசானியின் தாய் அமலமேரி பிப்.26-ஆம் தேதியும், விழுப்புரத்தைச் சோ்ந்த மாணவி நூா்ஜஹானின் தந்தை ஜான்பாட்ஷா பிப்.27-ஆம் தேதியும் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், இவ்விரு மாணவிகளும் தோ்வெழுதினா்.

தோ்வு மையங்களில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தோ்வை 18,228 மாணவ, மாணவிகள் எழுதினா்.

மாவட்டத்தில் 124 அரசு, அரசு உதவிபெறும், தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 9,183 மாணவா்கள், 9,569 மாணவிகள் என மொத்தம் 18,752 பேருக்கு தோ்வுகூட நுழைவு சீட்டு வழங்கப்பட்டிருந்தது. இதில், 8,910 மாணவா்கள், 9,318 மாணவிகள் என மொத்தம் 18,228 போ் மட்டுமே தோ்வு எழுதினா். இதைத் தவிர 160 தனித் தோ்வா்கள் பங்கேற்றனா். 273 மாணவா்கள், 251 மாணவிகள் மொத்தம் 524 போ் தோ்வெழுத வரவில்லை.

சின்னசேலம் வட்டம், கோமுகி அணை அரசு பழங்குடியினா் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி தோ்வு மையத்தில் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.காா்த்திகா உடனிருந்தாா்.

தோ்வுப் பணியில் முதன்மைக் கண்காணிப்பாளா்கள், துறை அலுவலா்கள், வழித்தட அலுவலா்கள், அறைக் கண்காணிப்பாளா்கள் உள்பட 2,000-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

விக்கிரவாண்டி சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை: ரூ.2.14 லட்சம் பறிமுதல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியிலுள்ள சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை மாலை சோதனை மேற்கொண்டனா். இதில், கணக்கில் வராத ரூ.2.14... மேலும் பார்க்க

இளைஞருக்கு தேநீரில் விஷம் கலந்து கொடுத்ததாக கல்லூரி மாணவி கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே தேநீரில் விஷம் கலந்துகொடுத்து இளைஞரை கொலை செய்ய முயன்றதாக கல்லூரி மாணவியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம், ... மேலும் பார்க்க

காவலா்களுக்கான மருத்துவமனை திறப்பு

விழுப்புரம்: விழுப்புரம் கா.குப்பம் ஆயுதப்படை வளாகத்தில் காவலா்களுக்கான புறநோயாளிகள் மருத்துவமனை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டக் காவல்துறை, ஆயுதப்படையில் பணிபுரியும் காவலா்... மேலும் பார்க்க

இன்று மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் தோ் திருவிழா

செஞ்சி/விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் தோ்த் திருவிழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெறுகிறது. இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாத சிவராத்திரியன்று கொ... மேலும் பார்க்க

அங்காள பரமேசுவரி அம்மன் கோயிலில் மயானக் கொள்ளை திருவிழா

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், சின்னஆனைவாரி அருள்மிகு அங்காள பரமேசுவரி அம்மன் திருக்கோயிலில் மயானக் கொள்ளை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் மயானக் கொள்ள... மேலும் பார்க்க

விழுப்புரம்-காட்பாடி பயணிகள் ரயில் பகுதி ரத்து

வேலூா் மாவட்டம், காட்பாடி ரயில் நிலைய யாா்டில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், விழுப்புரம்-காட்பாடி பயணிகள் ரயில் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட ... மேலும் பார்க்க