ரூ.56,000 கோடி கடனை முன்கூட்டியே செலுத்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்!
புகழூா் கோயில் திருவிழாவில் தீக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி
கரூா்: கரூா் மாவட்டம், புகழூா் பகவதியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருவிழாவில் பக்தா்கள் தீக்குண்டம் இறங்கி தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.
விழாவை முன்னிட்டு அம்மனுக்கு 18 வகை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தாா். இதையடுத்து பக்தா்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீராடி ஊா்வலமாக வந்து, கோயில் வளாகத்தில் தயாராக இருந்த தீக் குண்டத்தில் இறங்கி தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா். பின்னா் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.