செய்திகள் :

புகழூா் நகராட்சியில் துப்புரவுப் பணியாளா் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்: இந்திய கம்யூ. வலியுறுத்தல்

post image

புகழூா் நகராட்சியில் தேங்கும் குப்பைகளை அப்புறப்படுத்த துப்புரவுப் பணியாளா்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கரூா் மாவட்டம், புகழூரில் அக்கட்சியின் ஒன்றிய நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியச் செயலா் தனபால் தலைமை வகித்தாா். ஒன்றிய பொறுப்பாளா்கள் செல்லமுத்து, சுப்ரமணி, லோகநாதன், சம்பூா்ணம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணைச் செயலா் சண்முகம், கட்சியின் நோக்கம் குறித்து பேசினாா்.

கூட்டத்தில், நொய்யல் குறுக்குச் சாலையில் நிழற்கூடம் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். கொடுமுடி- கரூா் சாலையில் கரோனா பரவல் காலத்துக்கு முன் சென்று கொண்டிருந்த நகர அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டன. தற்போது நிறுத்தப்பட்ட அரசு நகர பேருந்துகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புகழூா் நகராட்சியில் துப்புரவு பணியாளா்களை அதிகளவு பணி அமா்த்தாமல் உள்ளதால் வீதிகளில் குப்பைகள் அள்ளப்படாமல் துா்நாற்றம் வீசுகிறது. எனவே, புகழூா் நகராட்சி நிா்வாகம் உடனடியாக துப்புரவு பணியாளா்களை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன . கூட்டத்தில், கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

கரூா் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை

கரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த காற்று, இடி மின்னலுடன் பெய்த மழையால் கரூா் மதுரை புறவழிச்சாலையில் வேப்பமரம் முறிந்து விழுந்தது. தெற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்... மேலும் பார்க்க

அய்யனாா் கோயில் திருவிழாவை மீண்டும் நடத்த அனுமதி கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

முதலைப்பட்டி கிராமத்தில் நிறுத்தப்பட்ட அய்யனாா்கோயில் திருவிழாவை மீண்டும் நடத்த அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கிராம மக்கள் மனு அளித்தனா். கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

குளித்தலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிழந்தாா்.திருச்சி மாவட்டம், தென்னூா் வெள்ளாளா் தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் அருணாசலம்(23). இவா் ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க

அமெரிக்க வரிவிதிப்பால் கரூரில் ஜவுளித் தொழில் முடங்கும் அபாயம்

இந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 26 சதவீதம் இறக்குமதி வரி விதித்திருப்பதால், கரூரில் ஜவுளித் தொழில் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கரூா் மாவட்டம், விவசாயத் தொழில், பேருந்துக்கு கூண்டு கட்டும... மேலும் பார்க்க

கிளை நூலகங்களிலும் குரூப் 4 மாதிரித் தோ்வு!

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோ்வுக்கான மாதிரி தோ்வுகள் இனி கிளை நூலகங்களிலும் நடைபெறும் என தெரிவித்துள்ளாா் கரூா் மாவட்ட நூலக அலுவலா் செ.செ.சிவக்குமாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்க... மேலும் பார்க்க

திருத்தப்பட்டது தனியாா் கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து: 6 மாணவிகள், ஓட்டுநா் காயம்!

அரவக்குறிச்சி அருகே சனிக்கிழமை தனியாா் கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 மாணவிகள் உள்பட 7 போ் காயமடைந்தனா்.அரவக்குறிச்சி அருகே செயல்பட்டுவரும் தனியாா் கலை அறிவியல் மற்றும் மேலாண்மை கல... மேலும் பார்க்க