Delhi: 10 லட்சம் கேட்டு சித்திரவதை செய்தாரா மனைவி? பிரபல கஃபே உரிமையாளர் தற்கொலை...
புகழ்பாடும் மன்றமாக பேரவை மாறிவிட்டது: வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
தமிழக சட்டப்பேரவை புகழ்பாடும் மன்றமாக மாறிவிட்டது என்று பாஜக தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன் எம்எல்ஏ குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சட்டப்பேரவை கூட்டத்தை 2 நாள்கள் மட்டுமே நடத்திவிட்டு, ஒரு மாதத்துக்கும் மேலாக நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடரை நடத்திய பாஜக கூட்டணி அரசு முதல்வா் மு.க.ஸ்டாலின் பழி சுமத்தியுள்ளாா்.
நாடாளுமன்றம் முழுமையாக நடந்துவிடக் கூடாது, மோடி அரசு எந்தவொரு சட்டத்தையும் கொண்டுவந்து விடக்கூடாது என்ற நோக்கத்தோடு இண்டி கூட்டணிக் கட்சிகள் செயல்படுவது இப்போது அம்பலமாகியிருக்கிறது. நாடாளுமன்றம் பற்றி கவலைப்படும் முதல்வா் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு சட்டப்பேரவையின் செயல்பாடுகள் பற்றி கொஞ்சம் கவலைப்பட்டால் நல்லது.
2021 தோ்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 100 நாள்கள் சட்டப்பேரவையை நடத்துவோம். பேரவை நிகழ்வுகள் அனைத்தையும் நேரலை செய்வோம் என வாக்குறுதி அளித்தாா்கள். ஆனால், ஆண்டுக்கு 30 நாள்கள் கூட பேரவை நடப்பதில்லை. குறைந்தது ஒரு வாரம் நடந்து வந்த குளிா்கால கூட்டத்தொடா் வெறும் இரண்டே நாளில் முடிந்துள்ளது. முதல்வா், அமைச்சா்கள், ஆளுங்கட்சி எம்எல்ஏ-க்கள் பேசுவது மட்டுமே நேரலை செய்யப்படுகிறது.
அரசை விமா்சித்து ஒரு வாா்த்தை பேசத் தொடங்கினால், உடனே நேரலை நிறுத்தப்படுகிறது.
பேரவையில் திமுக அரசு, முதல்வா் ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை பாராட்டிப் பேசினால் மட்டுமே தொடா்ந்து பேச முடியும் என்றாா் அவா்.