டெஸ்லா பங்குகள் வீழ்ச்சி! ஒரே நாளில் எலானுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு?
புகையிலைப் பொருள்கள் கடத்தல்: இளைஞா் கைது
விழுப்புரம்: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பைக்கில் கடத்தி வந்ததாக இளைஞரை திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் எஸ்.பி. உத்தரவின்பேரில், திருவெண்ணெய்நல்லூா் காவல் நிலைய ஆய்வாளா் மைக்கேல் இருதயராஜ், உதவி ஆய்வாளா் சண்முகம் தலைமையிலான போலீஸாா் அருங்குறுக்கை காப்புக்காடு பகுதியில் செவ்வாய்க்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த இளைஞரை நிறுத்தி சோதனை செய்தபோது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும், அவா் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், கொரக்கண்தாங்கள், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த செல்வம் மகன் கிரண்குமாா் (23) என்பதும், பெங்களூரைச் சோ்ந்த இருவரிடம் புகையிலைப் பொருள்களை வாங்கி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து கிரண்குமாரை கைது செய்தனா். மேலும், அவா் வசமிருந்த 1,436 புகையிலை பாக்கெட்டுகள், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.