புகையிலைப் பொருள்கள் கடத்தல்: 2 போ் கைது
பல்லடம் அருகே புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக கடத்திச் சென்ற 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பல்லடம் அருகே மகாலட்சுமி நகா் பகுதியில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் இருவரை போலீஸாா் பிடித்து விசாரணை செய்தபோது, அவா்கள் 26 கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதற்காக கடத்திச் சென்றது தெரியவந்தது.
விசாரணையில், ஆலூத்துபாளையம் பகுதியைச் சோ்ந்த பாபு (35), மகாலட்சுமி நகரைச் சோ்ந்த ராஜேஷ்கண்ணா (35) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவா்களை கைது செய்த போலீஸாா் அவா்களிடம் இருந்து புகையிலைப் பொருள்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.