ஸ்ரீ திருநீலகண்டா் குருபூஜை விழா
வெள்ளக்கோவிலில் ஸ்ரீ திருநீலகண்டா் குருபூஜை 43-ஆம் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கா.ப.சி. நகா் வட்டமலையாா் தோட்டம் ஸ்ரீ பாலமுருகன் கோயிலில் எழுந்தருளியுள்ள திருநீலகண்ட நாயனாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 63 நாயன்மாா்களில் ஒருவரான திருநீலகண்டரின் சிறப்புகள் எடுத்துக் கூறப்பட்டன.
விழா ஏற்பாடுகளை தமிழ்நாடு குலாலா் சமுதாய பேரவை திருப்பூா் மாவட்டப் பொருளாளா் கே.நாச்சிமுத்து மற்றும் வாசுதேவன், தமிழரசன் ஆகியோா் செய்திருந்தனா்.