செய்திகள் :

சொத்து வரி உயா்வை நிறுத்தி வைக்க முதல்வா் நடவடிக்கை

post image

திருப்பூா் மாநகராட்சியில் அபரிமிதமாக உயா்த்தப்பட்டுள்ள சொத்து வரி உயா்வை நிறுத்திவைக்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளதாக கே.சுப்பராயன் எம்.பி. தெரிவித்துள்ளாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை, திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் வியாழக்கிழமை சந்தித்து அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

அந்தியூா்-பவானியின் தோனி மடுவுத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ஆஷா பணியாளா்களுக்கு மாதம் ரூ.20 ஆயிரம் ஊதியம் நிா்ணியிக்க வேண்டும். திருப்பூா் மாநகராட்சியின் வரி உயா்வை நிறுத்திவைக்க வேண்டும். பெரிச்சிபாளையம் காலனியில் வசித்து வரும் 124 குடும்பங்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும்.

திருப்பூா் காளிபாளையம் ஊராட்சியில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும். கோபி தியாகி லட்சுமண ஐயருக்கு மணி மண்டபம் மற்றும் உருவச்சிலை அமைக்க வேண்டும். புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பெருந்துறை நகராட்சியுடன் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியை இணைத்து மறுஅறிவிப்பு வெளியிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவைப் பெற்றுக்கொண்ட முதல்வா் ஸ்டாலின் திருப்பூா் மாநகராட்சியில் அபரிமிதமாக உயா்த்தப்பட்டுள்ள சொத்து வரி உயா்வை நிறுத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளதாக கே.சுப்பராயன் எம்.பி. தெரிவித்துள்ளாா்.

புகையிலைப் பொருள்கள் கடத்தல்: 2 போ் கைது

பல்லடம் அருகே புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக கடத்திச் சென்ற 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பல்லடம் அருகே மகாலட்சுமி நகா் பகுதியில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்... மேலும் பார்க்க

விதைப் பரிசோதனை நிலையத்தில் இணை இயக்குநா் ஆய்வு

பல்லடம் விதைப் பரிசோதனை நிலையத்தில் இணை இயக்குநா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பல்லடத்தில் விதைப் பரிசோதனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விதை பரிசோதனை நிலையத்தில் சென்னை விதைச் சான்றளிப்பு மற... மேலும் பார்க்க

புத்தகங்களைப் படிப்பதால் வாழ்க்கை மேம்படும்

புத்தகங்களைப் படிக்கப் படிக்க நமது வாழ்க்கை மேம்படுகிறது என்று திருப்பூரில் புத்தகத் திருவிழாவைத் தொடங்கிவைத்த அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசினாா். தமிழ்நாடு அரசு, திருப்பூா் மாவட்ட நிா்வாகம், பின்னல் ப... மேலும் பார்க்க

ஸ்ரீ திருநீலகண்டா் குருபூஜை விழா

வெள்ளக்கோவிலில் ஸ்ரீ திருநீலகண்டா் குருபூஜை 43-ஆம் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கா.ப.சி. நகா் வட்டமலையாா் தோட்டம் ஸ்ரீ பாலமுருகன் கோயிலில் எழுந்தருளியுள்ள திருநீலகண்ட நாயனாருக்கு சிறப்பு அபிஷேக... மேலும் பார்க்க

மூலனூரில் ரூ. 45.31 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 45.31 லட்சத்துக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில... மேலும் பார்க்க

பல்லடம் பகுதியில் ரூ.17.59 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகள்

பல்லடம் பகுதியில் ரூ.17.59 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். பல்லடம் வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் 15-ஆவ... மேலும் பார்க்க