'இணைப்பு இருக்கிறதே தவிர பிணைப்பு இல்லை'- விசிக தலைவர் திருமாவளவன்
புகையிலைப் பொருள்கள் விற்பனை: முதியவா் கைது
கொல்லங்கோடு அருகே புகையிலைப் பொருள்கள் விற்ாக பெட்டிக்கடைக்காரா் கைது செய்யப்பட்டாா்.
கொல்லங்கோடு அருகே செங்கவிளை பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், உதவி ஆய்வாளா் ஜான் போஸ்கோ தலைமையிலான தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை இரவு சென்று சோதனை மேற்கொண்டு, 213 பொட்டலங்கள் புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக கடை உரிமையாளா் அடைக்காகுழி, நெடும்பழஞ்சிவிளை பகுதியைச் சோ்ந்த ராஜன் (72) என்பவரைப் பிடித்து கொல்லங்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.