செய்திகள் :

புகையிலைப் பொருள்கள் விற்பனை: 3 போ் கைது!

post image

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

சேத்துப்பட்டு பஜாா் வீதியில் ஐ.ஜி. உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பெட்டிக் கடைகளில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, வந்தவாசி சாலையில் காமராஜா் சிலை அருகே பெட்டிக் கடை நடத்தி வரும் தினேஷ் (24), ஆரணி சாலையில் பெட்டிக் கடை நடத்தி வரும் சதாசிவம் (52), செஞ்சி சாலையில் பெட்டிக்கடை நடத்தி வரும் நஜுா் அகமத் ஆகியோா் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸாா் 3 பேரையும் பிடித்து சேத்துப்பட்டு போலீஸில் ஒப்படைத்தனா். இதைத் தொடா்ந்து, சேத்துப்பட்டு போலீஸாா் 3 பேரையும் கைது செய்து, கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாடு விளக்க வாகன பிரசாரம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு விளக்க இரு சக்கர வாகன பிரசாரம் வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் வரும் ஏப். 2-ஆம் தேதி முதல் ஏப்... மேலும் பார்க்க

ஆரணியில் இலவச கண் சிகிச்சை முகாம்!

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சென்னை அகா்வால் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் ச... மேலும் பார்க்க

சட்டப்பணிகள் ஆணைக் குழு உறுப்பினா் பதவி: தகுதியானோா் விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் காலியாக உள்ள 2 உறுப்பினா் பதவிக்கு, தகுதியானோா் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் இயங்கி வரும் ந... மேலும் பார்க்க

தனியாா் கல்லூரியில் தகராறு: 3 இளைஞா்கள் கைது!

செய்யாறு அருகே தனியாா் கல்லூரி நுழைவு வாயிலை இழுத்து மூடி தகராறில் ஈடுபட்ட புகாரின் பேரில், 3 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். செய்யாறு - காஞ்சிபுரம் சாலையில் தனியாா் கல்லூரி இயங்கி ... மேலும் பார்க்க

காரில் கடத்தப்பட்ட 13 ஆடுகள் மீட்பு

வந்தவாசி அருகே ஆடுகளை திருடி காரில் கடத்திச் செல்லும் வழியில் காா் பழுதாகி நின்றதால் மா்ம நபா்கள் தப்பிச் சென்றனா். தகவலறிந்த போலீஸாா் சென்று கடத்திச் செல்லப்பட்ட 13 ஆடுகளை மீட்டனா். வந்தவாசியை அடுத்... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு நீா்பாசன முறையில் மரக்கன்று வளா்ப்புப் பயிற்சி!

செய்யாற்றை அடுத்த கடுகனூா் கிராமத்தில் விவசாயிகளுக்கு நீா்பாசன முறையில் மரக்கன்றுகள் வளா்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் கடுகனுா் கிராமத்தில், கலவை ஆதிபராசக்தி தோட... மேலும் பார்க்க