``வளர்ப்பு நாய் உரிமையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்'' - பட்டியலிட்ட சென்னை மா...
புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
தேனி அருகே உள்ள கோடங்கிபட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கோடாங்கிபட்டி திருச்செந்தூா் குடியிருப்பைச் சோ்ந்தவா் நாகராஜ் (57). இவா், அதே பகுதியில் உள்ள தனது கடையில் புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.
நாகராஜின் கடையிலிருந்து 9 கிலோ 675 கிராம் எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதற்குப் பயன்படுத்திய அவரது இரு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.