ஹாக்கி இந்தியா விருதுகள்: சிறந்த ஹாக்கி குழு விருதைப் பெற்ற தமிழ்நாடு!
'புதிதாக வருபவர்களுடன் போட்டிபோடும் இடத்தில் இருக்கிறார் வெற்றிமாறன்..!' - நெகிழ்ந்த லிங்குசாமி
ஆனந்த விகடன் யூடியூப் சேனலில் ஒளிபரப்பாகும் 'கதைப்போமா வித் பர்வீன் சுல்தானா' நிகழ்ச்சிக்கு இயக்குநர் லிங்குசாமி பேட்டிக் கொடுத்திருக்கிறார். அந்தப் பேட்டியில் சினிமா குறித்து பல விஷயங்களைப் பகிர்ந்திருக்கும் அவர் புதிய இயக்குநர்களின் வருகைக் குறித்தும் பேசியிருக்கிறார். "எந்த நல்லப் படங்கள் வந்தாலும் அந்த இயக்குநர்களை நேரில் சந்தித்துப் பேசுவேன். 'சில்லுக்கருப்பட்டி', 'காக்கா முட்டை' படங்கள் வெளியானப் போது அந்தப் படத்தின் இயக்குநர்களை நேரில் அழைத்துப் பாராட்டினேன். சமீபத்தில் வெளியான 'அமரன்', 'லப்பர் பந்து' எனக்கு மிகவும் பிடிந்திருந்தது.

அந்த இரண்டு இயக்குநர்களும் அற்புதமாக இயக்கி இருக்கிறார்கள். 'லப்பர் பந்து' படத்தில் தினேஷ் அருமையாக நடித்திருந்தார். 'டான்', 'டாடா' படத்தின் இயக்குநர்களும் நன்றாக இயக்கி இருந்தர்கள். அதேபோல ரஞ்சித், மாரி செல்வராஜ் படங்களைப் பார்த்துவிடுவேன். வெற்றிமாறன் ரொம்ப வருஷத்துக்கு முன்பு இருந்து சினிமாவில் இருக்கிறார். இருந்தாலும் இன்றைக்கும் புதிதாக வருபவர்களுடன் போட்டிபோடும் இடத்தில் இருக்கிறார்.
வெற்றிமாறன் சார் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை தெலுங்கு மற்றும் பாலிவுட் நடிகர்களுக்கு இருக்கிறது. பெரிய பெரிய ஹீரோக்கள் கூட இப்படி சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ராம் சரண், அல்லு அர்ஜூன், ஜூனியர் என்.டி ஆர் உள்ளிட்ட நடிகர்கள் எல்லாம் வெற்றிமாறன் படத்தில் நடிக்க தயாராக இருக்கிறார்கள்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்," மிக முக்கியமான இயக்குநர்கள் எல்லாம் சமீபத்தில் வந்துவிட்டார்கள். கார்த்திக் சுப்புராஜ் காலக்கட்டம் வரை வந்த இயக்குநர்களின் பெயர்கள் எல்லாம் நினைவில் இருக்கிறது. அதன்பிறகு வந்த இயக்கு நர்கள் எல்லாம் ஒரு படம் இரண்டு படத்திற்கு பிறகு தொடர்கிறார்களா? என்று தெரியவில்லை. ஆனால் நிறைய புது இயக்குநர்கள் நன்றாகப் படத்தை இயக்குகிறார்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...