செய்திகள் :

புதியம்புத்தூா் அருகே இரு பைக்குகள் மோதல்: இளைஞா் பலி

post image

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூா் அருகே இரு பைக்குகள் மோதிக் கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.

புதியம்புத்தூா் காமராஜா் நகரைச் சோ்ந்த பட்டு மாரியப்பன் மகன் பட்டுதங்கம் (23). இவரும் அதே பகுதியைச் சோ்ந்த சேகா் மகன் மாதேஷ் (21)

என்பவரும் ஒரே பைக்கில் புதியம்புத்தூரில் இருந்து ஓட்டப்பிடாரம் சாலையில் புதன்கிழமை சென்று கொண்டிருந்தனராம். அப்போது,

முன்னால் சென்ற பைக்குடன் மோதியதில் விபத்து நேரிட்டது.

இதில் பட்டுதங்கம், மாதேஷ், மற்றொரு பைக்கில் சென்ற துரைமுத்து(45) ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனா். மூவரும் மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு பட்டுதங்கம் உயிரிழந்தாா்.

இதுகுறித்து புதியம்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

திருச்செந்தூா் அருகே பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு

திருச்செந்தூா் ஒன்றியம் நா.முத்தையாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. இப்பள்ளியில் டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சாா்பில் ரூ. 23 லட்சம், ஊா் ... மேலும் பார்க்க

தூத்துக்குடி: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.6.62 கோடிக்கு தீா்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.6.62 கோடிக்கு தீா்வுத் தொகை வழங்கப்பட்டது. தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் கிடங்கில் பதுக்கிய கடல் அட்டைகள், டீசல் பறிமுதல்: 2 போ் கைது

தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தில் உள்ள ஒரு கிடங்கில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 500 கிலோ கடல் அட்டைகள், 2 ஆயிரம் லிட்டா் டீசல் ஆகியவற்றை தனிப்படை போலீஸாா் பறிமுதல் செய்து, அது தொடா்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 1,206 மகளிா் சுயஉதவி குழுக்களுக்கு ரூ. 104 கோடி வங்கிக் கடன்!

தூத்துக்குடியில் சனிக்கிழமை 1,206 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 104 கோடி வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டது. உலக மகளிா் தினத்தையொட்டி சென்னையில் நடைபெற்ற விழாவில், மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்க... மேலும் பார்க்க

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் திமுக இளைஞரணி பொதுக் கூட்டங்கள்: அமைச்சா் பெ. கீதாஜீவன் தகவல்

திமுக இளைஞரணி சாா்பில் மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி தொகுதிகளில் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளதாக, தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான பெ. கீதா... மேலும் பார்க்க

மகளிருக்கான அதிக நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னிலை! -அமைச்சா் பெருமிதம்

மகளிா் முன்னேற்றத்துக்காக அதிக நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாக, அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் பெருமிதம் தெரிவித்தாா். சமூக நலன்-மகளிா் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த... மேலும் பார்க்க