Kerala Ragging: அந்தரங்க உறுப்பில் தம்பிள்ஸை கட்டி தொங்கவிட்டு சித்திரவதை; கல்லூ...
புதிய ஆளுநர் கையெழுத்துடன் ரூ.50 நோட்டுக்கள்! ஆர்பிஐ தகவல்!
இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநரின் கையெழுத்துடன் ரூ.50 பணத்தாள்கள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி இன்று (பிப்.12) வெளியிட்டுள்ள அறிக்கையில் புதிய ஆளுநராக பதவியேற்ற சஞ்சய் மல்ஹோத்ராவின் கையெழுத்துடன் ரூ.50 பணத்தாள்கள் விரைவில் அச்சிடப்பட்டு வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:ராகிங் புகார்: முதலாமாண்டு மாணவர்களின் அந்தரங்க உறுப்புகளில் டம்ப்-பெல்ஸ் தொங்கவிட்டுக் கொடுமை! -கல்லூரி முதல்வர் விளக்கம்
பழைய ரூ.50 பணத்தாள்களின் வடிவமைப்பில் மகாத்மா காந்தி புதிய வரிசை எண்களுடன் இந்த தாள்கள் வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டு தற்போது புழக்கத்திலுள்ள ரூ.50 நோட்டுக்களும் சட்டபூர்வமாக செல்லுபடியாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சக்திகந்தா தாஸ் தனது நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் முடிந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பரில் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா பதவியேற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.