செய்திகள் :

புதிய கூட்டுறவு சங்க பல்கலைக்கழகம்: மக்களவையில் மசோதா அறிமுகம்

post image

கூட்டுறவு சங்கங்களுக்கு திறன்மிகுந்த பணியாளா் வளத்தை உருவாக்கும் நோக்கில் புதிதாக கூட்டுறவு சங்கப் பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்க மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய கூட்டுறவுத் துறை இணையமைச்சா் கிஷன் பால் ‘திரிபுவன் சஹகாரி பல்கலைக்கழக மசோதா’ என்ற பெயரிலான இந்த மசோதாவை அறிமுகம் செய்தாா்.

கூட்டுறவு சங்க பணிக்கான தற்போதைய கல்வி முறையும் பயிற்சித் திட்டங்களும் போதுமானதாக இல்லை. மேலும், அவை ஆங்காங்கே தனித்தனியாக உள்ளன. இந்த நிலையை மாற்றவும், கூட்டுறவுத் துறையில் தகுதிவாய்ந்த பணியாளா்களின் வருங்காலத் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையிலும் அந்தத் துறை சாா்ந்த தேசிய பல்கலைக்கழகம் ஒன்று புதிதாக உருவாக்குவது அவசியமாக உள்ளது.

இதன் மூலம், கூட்டுறவுத் துறைக்கு திறன் வாய்ந்த பணியாளா்களை உருவாக்கும் வகையில் ஒருங்கிணைந்த தரமான கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் திட்டத்தை உருவாக்க முடியும். கூட்டுறவுத் துறையில் வாரிய உறுப்பினா்கள் மற்றும் ஊழியா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குவதில் நீண்டகாலமாக இருந்துவரும் தடையும் இதன் மூலம் நீங்கும் என்றும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோடி அமெரிக்காவுக்குச் சென்றுவந்த பிறகு தில்லி முதல்வர் பதவியேற்பு விழா?

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்குச் சென்று வந்த பிறகு தில்லி முதல்வர் பதவியேற்பு விழா நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.பிப். 12, 13 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயண... மேலும் பார்க்க

தில்லி முதல்வர் யார்? அமித் ஷாடன் நட்டா சந்திப்பு!

தில்லியில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா நேரில் சந்தித்தார். தில்லி புதிய முதல்வரை தேர்வு செய்வது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாஜக விரைவில் அ... மேலும் பார்க்க

தில்லியில் ஆட்சி அமைத்ததும் பாஜகவின் முதல் திட்டம்!

தில்லியில் முறையாக ஆட்சி அமைத்ததும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், மாநிலத்திலுள்ள ஊழல் வழக்குகளை ஆராய சிறப்பு விசாரணைக் குழு அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. நடைபெற்றுமுடிந்த தில்லி சட்டப் பேரவைத் தோ்தல... மேலும் பார்க்க

2026-ல் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி: தர்மேந்திர பிரதான்

2026-ல் நடைபெறவுள்ள மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று (பிப். 9) தெரிவித்தார். இது குறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களுட... மேலும் பார்க்க

மணிப்பூர் முதல்வர் ராஜிநாமா!

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை ராஜிநாமா செய்தார். தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் அஜய்குமார் பல்லாவிடம் வழங்கினார். மேலும் பார்க்க

வீட்டிற்குத் தாமதமாக வந்ததால் மகனை அடித்துக் கொன்ற தந்தை!

தெலங்கானாவில் வீட்டிற்குத் தாமதமாக வந்ததால் ஆத்திரமடைந்த தந்தை, மகனை அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தாய் கொடுத்த புகாரின் பேரில் தலைமறைவான தந்தையை காவல் துறையினர் தேடி வருகின்றனர... மேலும் பார்க்க