செய்திகள் :

2026-ல் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி: தர்மேந்திர பிரதான்

post image

2026-ல் நடைபெறவுள்ள மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று (பிப். 9) தெரிவித்தார்.

இது குறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், மத்திய பாஜக அரசு அளிக்கும் நலத் திட்ட உதவிகளை முட்டுக்கட்டையிட்டு தடுத்துவிட்டு, மாநில அரசை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டதைப்போன்று முதல்வர் மமதா பானர்ஜி நாடகமாடுவதாக விமர்சித்தார்.

தொடர்ந்து தர்மேந்திர பிரதான் பேசியதாவது,

மேற்கு வங்கத்தில் கடந்த 2019 முதல் பாஜகவின் வாக்கு விகிதம் 30 - 40 சதவீதம் அதிகரித்துள்ளது. கூடுதலாக 10 சதவீத வாக்குகள் கிடைத்தால் மமதா பானர்ஜியை அதிகாரத்தில் இருந்து பாஜக இறக்கிவிடும்.

கடந்த மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்திலுள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் 18 இடங்களில் பாஜக வெற்றியைப் பதிவு செய்தது. மேற்கு வங்கத்தில் அடுத்து வரவுள்ள 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

ஆம் ஆத்மியின் தவறான வழிகாட்டுதலால் விழிப்படைந்த மக்கள், பாஜகவின் மீது நம்பிக்கை வைத்து ஆட்சி அதிகாரத்தை வழங்கியுள்ளனர். இனி இது மற்ற மாநிலங்களிலும் தொடரும் எனக் குறிப்பிட்டார் தர்மேந்திர பிரதான்.

மணிப்பூர் இனக் கலவரத்திற்கு மோடி, அமித்ஷா பொறுப்பேற்க வேண்டும்! - கனிமொழி

மணிப்பூரில் நடந்த இனக் கலவரத்திற்கு பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பொறுப்பேற்க வேண்டும் என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கைய... மேலும் பார்க்க

பிரேன் சிங் ராஜிநாமா வெகு நாள்களுக்கு முன்பே நடந்திருக்க வேண்டியது: பிரியங்கா!

மணிப்பூர் முதல்வர் ராஜிநாமா வெகு நாள்களுக்கு முன்பே நடந்திருக்க வேண்டியது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறினார்.மூன்று நாள் பயணமாகக் கேரளம் வந்துள்ள பிரியங்கா காந்தி காங்கிரஸின் மு... மேலும் பார்க்க

மெட்டா நிறுவனத்தில் 3,000 பேர் பணி நீக்கம்!

பணித்திறன் சார்ந்த நடவடிக்கையாக, மெட்டா நிறுவனம், பல்வேறு நாடுகளில் இயங்கி வரும் தனது நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 3,600 பணியாளர்களை பணி நீக்கம் செய்யவிருக்கிறது.நாளை முதல், பணி நீக்க நடவடிக்கை தொட... மேலும் பார்க்க

மாணவர்கள் ஒன்றும் ரோபோக்கள் அல்ல.. பிரதமர் மோடி

புது தில்லி: பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ளவிருக்கும் மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, மாணவர்கள் ஒன்றும் ரோபோக்கள் அல்ல என்று கூறியுள்ளார். மேலும் பார்க்க

மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி வலியுறுத்தல்

மக்கள் தொகை கணக்கெடுப்பை விரைவில் முடிக்குமாறு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி அரசிடம் திங்கள்கிழமை வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேர உரையில், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் ... மேலும் பார்க்க

அமேதி: மதுபோதையில் 80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர் கைது

அமேதியில் மதுபோதையில் 80 வயது மூதாட்டி பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம், அமேதி காவல் நிலையப் பகுதியில் உள்ள கிராம ஒன்றில் மதுபோதையில் இளைஞர் ஒருவ... மேலும் பார்க்க