செய்திகள் :

தஞ்சைக்கு நாளை உள்ளூர் விடுமுறை!

post image

தஞ்சை மாவட்டத்துக்கு நாளை (பிப்.10) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார்.

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் குடமுழுக்கையொட்டி, விடுமுறை விடப்படுவதாகவும் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக பிப்.22 ஆம் தேதி பணி நாளாக கருதப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தஞ்சை அருகே உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் கடந்த 2004 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது. 21 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தன.

இதனிடையே நாளை (பிப். 10) அக்கோயிலுக்கு குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் முழு வீச்சில் செய்யப்பட்டுள்ளன.

இதனையொட்டி, தஞ்சை மாவட்டத்துக்கு நாளை (பிப்.10) உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் நாளை செயல்படாது எனவும் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக பிப். 22 ஆம் தேதி பணி நாளாக கருதப்படும் எனவும் ஆட்சியர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை விமான நிலைய 2-வது ஓடுதளத்துக்காக இடிக்கப்படும் உயரமான கட்டடங்கள்!

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் உள்ள இரண்டாவது ஓடுதளத்தை முழுமையாக பயன்படுத்துவதற்கு இடையூறாக இருக்கும் உயரமாக கட்டடங்களை இடிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.கொளப்பாக்கம் பகுதியில் அதிகளவிலான தென்னை மரங்க... மேலும் பார்க்க

பொங்கல் தொகுப்பில் ஊழல்: அமைச்சர் காந்தி பதவி விலக வேண்டும்! - அண்ணாமலை

பொங்கல் தொகுப்புத் திட்டத்தில் ஊழல் செய்துவரும் அமைச்சர் ஆர். காந்தி பதவி விலக வேண்டுமென தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.... மேலும் பார்க்க

பழனி தைப்பூசம்: சிறப்பு ரயில் இயக்கம்

பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழாவையொட்டி நாளை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி மதுரை-பழனி இடையே பிப்.11, 12 ஆகிய நாள்களில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந... மேலும் பார்க்க

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தக்கோரி சென்னையில் மாபெரும் போராட்டம்: அன்புமணி

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி சென்னையில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதற... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு எம்எல்ஏவாக பதவியேற்றார் சந்திரகுமார்!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவின் சந்திரகுமார், எம்எல்ஏவாக திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை நடைப... மேலும் பார்க்க

ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு தீவிர சிகிச்சை

ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண் மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்க... மேலும் பார்க்க