பாகிஸ்தான் ரயில் சிறைபிடிப்பு: 33 பயங்கரவாதிகள் கொலை... மீட்புப் பணிகள் நிறைவு!
புதிய தோற்றத்தில் நகுல்!
நடிகர் நகுல் புதிய தோற்றத்திலிருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நகுல் சில ஆண்டுகள் இடைவெளிவிட்டு உடல் எடையைக் குறைத்து, காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் சினிமாவுக்கு ரி-என்ட்ரி கொடுத்தார்.
முக்கியமாக, அப்படத்தில் இடம்பெற்ற ‘நாக்க மூக்க’ பாடலுக்காகவே பெரிய வெற்றியைப் பெற்றது.
இதையும் படிக்க: விடாமுயற்சி வசூலைக் கடந்த டிராகன்?
தொடர்ந்து, மாசிலாமணி, கந்தக்கோட்டை உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகராக வந்தார். ஆனால், மீண்டும் சில தோல்விப்படங்களால் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தவருக்கு வல்லினம், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் ஆகிய படங்கள் திருப்புமுனையாக அமைந்தன.

இறுதியாக, வாஸ்கோடகாமா படத்தில் நடித்திருந்தார். அப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இந்த நிலையில், தன் புதிய புகைப்படங்களை நகுல் பகிர்ந்துள்ளார். குத்துச்சண்டை வீரர் போல் கட்டுமஸ்தான தோற்றத்தில் காணப்படுவதால், இது புதிய படத்திற்கானதாக இருக்கலாம் எனத் தெரிகிறது.
