புதிய நியாயவிலை கடையை திறக்க வேண்டுகோள்
சின்னதாராபுரம் அருகே அரங்கபாளையம் பகுதியில் நியாய விலை கடை அமைந்துள்ளது. இது பழைய கட்டடம் என்பதால் புதிய கட்டடம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆனால் தற்போது வரை புதிய கட்டடத்தை திறக்காமல் பராமரிப்பின்றி கிடப்பில் உள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா். மேலும், பழைய கட்டடத்தில் ரேஷன் பொருள்கள் வழங்குவதால் மழை, வெயில் காலங்களில் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாவதாக கூறப்படுகிறது. எனவே புதிய கட்டடத்தை திறந்து வைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.