செய்திகள் :

புதிய போப் யார்? மே 7 கார்டினல்கள் குழு கூடுகிறது!

post image

ரோம்: புதிய போப்பாண்டவரைத் தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய ஆலோசனைக் கூட்டமும் வாக்கெடுப்பும் மே 7-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

நுரையீரல் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த வாடிகன் நகரத்தின் தலைவரும் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவுமான போப் பிரான்சிஸ் கடந்த ஏப்.21 ஆம் தேதி காலமானார். போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு ஏப். 26 ஆம் தேதி புனித பீட்டர் சதுக்கத்தில் நடைபெற்ற பின்னர் அவரது விருப்பப்படி புனித மேரி தேவாலயத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய போப்பாண்டவரைத் தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய ஆலோசனைக் கூட்டமும் வாக்கெடுப்பும் மே 7-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

வாடிகன் நகரில் அமைந்துள்ள 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாரம்பரியமிக்க சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் ஆலோசனை கூட்டமும், ரகசிய வாக்கெடுப்பும் நடைபெறும். இதற்கான பணிகளுக்காக சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் பணியாளர்கள் தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டியிருப்பதால், திங்கள்கிழமைமுதல் அங்கு செல்ல பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

உலகெங்கிலுமிருந்து கத்தோலிக்க திருச்சபையில் போப்பை தேர்ந்தெடுப்பதற்கான பிரதிநிதித்துவம் பெற்ற காா்டினல்கள் (கத்தோலிக்க மத குருக்கள் - சிவப்பு நிற தொப்பியணிந்த கிறிஸ்தவ மத குருமாா்கள்) மற்றும் மறைந்த போப் ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளவர்கள் உள்பட மொத்தம் 135 பேர் சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் மே மாதம் ஒன்றுகூடி, தனி அரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடத்துவர். அப்போது வெளியாட்கள் யாரும் உள்ளே செல்லாத வகையில் தேவாலய கதவுகள் மூடப்பட்டுவிடும், தொடர்ந்து ரகசிய காப்பு பிரமாணத்தை அவர்கள் எடுத்துக்கொள்வர். அதன்பின் அடுத்தக்கட்டமாக நடைபெறும் வாக்கெடுப்பில் பங்கேற்பர்.

புதிய போப்பை தேர்ந்தெடுப்பதற்கான கால வரம்பு இல்லையெனினும் இந்த பணிகள் இரண்டு அல்லது மூன்று நாள்களுக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேவாலயத்தில் இணைக்கப்பட்டுள்ள புகைக்கூண்டில் புகையை வெளியேற்றி முடிவுகள் அறிவிக்கப்படும். கரும்புகை வெளியானால், புதிய போப் இன்னும் தோ்வாகவில்லை என்றும் வெள்ளை புகை வெளியானால், புதிய போப் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா் என்றும் பொருளாகும்.

புதிய போப்-ஐ தேர்ந்தெடுக்க தகுதிப் பெற்ற 135 கர்டினால்களில் கோவா மாநிலத்தைச் சேர்ந்த பேராயர் ஃபிளிப்பே நெரி ஃபெர்ராரோ (வயது 72), ஹைதரபாத்தைச் சேர்ந்த கார்டினல் அந்தோனி பூலா (63), கேரளாவைச் சேர்ந்த ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காடு (51) மற்றும் பசேலியோஸ் கிளேமிஸ் (65) ஆகிய 4 இந்திய கர்டினால்களும் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடா: ஆம் ஆத்மி நிர்வாகியின் மகள் சடலமாக மீட்பு! உடலைத் தாயகம் கொண்டு வர வலியுறுத்தல்!

கனடா நாட்டில் பலியான இந்திய மாணவியின் உடலைத் தாயகம் கொண்டு வர அவரது குடும்பத்தினர் மத்திய அரசின் உதவியை நாடியுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தின் மொஹாலி மாவட்டத்தைச் சேர்ந்த ஆம் ஆத்மி நிர்வாகி தவிந்தர் சையினி... மேலும் பார்க்க

சீன உணவகத்தில் தீ: 22 பேர் பலி!

சீனாவில் உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் பலியாகியுள்ளனர். லியோனிங் மாகாணத்தில் செயல்பட்டு வந்த உணவகத்தில் இன்று (ஏப்.29) மதியம் 12.25 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அங்கிரு... மேலும் பார்க்க

கனடா தேர்தலில் காலிஸ்தான் தலைவர் படுதோல்வி! கட்சி அந்தஸ்தும் பறிபோனது!

கனடா பொதுத் தேர்தலில் காலிஸ்தான் ஆதரவாளரான ஜக்மீத் சிங் படுதோல்வி அடைந்துள்ளார்.மேலும், அவரது புதிய ஜனநாயகக் கட்சி வெறும் 6 இடங்களில் மட்டுமே வெற்றியைப் பதிவு செய்த நிலையில், கட்சிக்கான அந்தஸ்து பறிபோ... மேலும் பார்க்க

இந்தியா போர் தொடுத்தால்.. மீம்ஸ் போட்டு கலாய்க்கும் பாகிஸ்தானியர்கள்! கொஞ்சம் கூட சீரியஸ்னஸ் இல்லை!!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையில், பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்குமோ என்ற அச்சமும் மக்களிடையே எழுந்துள்ளது.ஆனால், அதற்கெல்... மேலும் பார்க்க

ஜாக்கி சானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

நடிகர் ஜாக்கி சானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு, திரைத்துறையில் அவர் படைத்த சாதனைகளுக்காக கௌரவிக்கப்பட உள்ளார். நடிகர், இயக்குநர், எழுத்தாளர், தயாரிப்பாளர், பாடகர், முக்கியமாக சண்டைக் க... மேலும் பார்க்க

கனடா பிரதமராகும் மார்க் கார்னே! அமெரிக்காவுடனான உறவுக்கு முடிவு என அறிவிப்பு!

அமெரிக்காவின் வர்த்தகப் போர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்ற கனடா பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக மார்க் கார்னே பதவியேற்கவுள்ளார்.இதனைத் தொடர்ந்து, மக்கள் மத்தியில் உரையாற்றிய மார... மேலும் பார்க்க