செய்திகள் :

புதிய லேப்டாப், டேப்லட் சாதனங்களை அறிமுகம் செய்த மோட்டோரோலா!

post image

மோட்டோரோலா நிறுவனம் புதிய லேப்டாப், டேப்லட் சாதனங்களை இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளனர்.

கடந்த வாரம் மோட்டோ எட்ஜ் 60 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்திய மோட்டோரோலா நிறுவனம் இந்த வாரம் புதிய சாதங்களுடன் களமிறங்கியுள்ளது.

மோட்டோ புக் 60 லேப்டாப்  (Moto Book 60 laptop)

விண்டோஸ் இயங்குதளம் 11 உடன் இயங்கும் இந்த லேப்டாப் 14 இன்ச் திரையைக் கொண்டுள்ளது. இதன் அளவு 2880x1800 பிக்சல்கள்.

இண்டெகரேட்டட் இண்டெல் கிராபிக்ஸ் (Integrated Intel Graphics) மூலம் இயக்கப்படும் இதில் வைஃபை 7, ப்ளூடூத், யூஎஸ்பி USB 3.2 Gen 1 (Type A), USB 3.2 Gen 2 (Type C) ஆகிய வசதிகள் உள்ளன.

இதன் கேமரா 1080p Full HD வசதியுடன் பிரைவசி ஷட்டர் உடன் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், டால்பி அட்மாஸ் வசதியுடன் மேம்படுத்தப்பட்ட 2 ஸ்ட்ரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன.

60Wh பேட்டரி திறனுடன் 65W சார்ஜர் கொடுக்கப்பட்டுள்ளதால் இதில் வேகமாக சார்ஜ் ஏறும். லேப்டாப் எடை 1.39 கி உள்ளது.

மூன்று வகைமைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த லேப்டாப்கள் பிரான்ஸ் க்ரீன், வெட்ஜ்வுட் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

மோட்டோ புக் 60 லேப்டாப் (Moto Book 60 laptop)

1. இன்டெல் கோர் 5 ப்ராசஸர் 512GB (Intel Core 5)

  • ரேம் (RAM): 16GB

  • சேமிப்பு (Storage): 512GB SSD

  • விலை ( Price) : ரூ. 66,990 (அறிமுக விலை: ₹61,999)

2. இன்டெல் கோர் 7 ப்ராசஸர் 512GB (Intel Core 7)

  • ரேம் (RAM): 16GB

  • சேமிப்பு (Storage): 512GB SSD

  • விலை ( Price) : ரூ. 74,990 (அறிமுக விலை: ரூ. 69,999)

3. இன்டெல் கோர் 7 ப்ராசஸர் 1TB (Intel Core 7)

  • ரேம் (RAM): 16GB

  • சேமிப்பு (Storage): 1TB SSD

  • விலை (Price) : ரூ. 78,990 (அறிமுக விலை: ரூ. 73,999)

மோட்டோ பேட் 60 ப்ரோ டேப்லட் (Moto Pad 60 Pro)

மோட்டோ பேட் 60 (Moto Pad 60 Pro) டேப்லட்12.7 இன்ச் திரையுடன் 1டிபி (1TB) வரை விரிவுபடுத்திக்கொள்ளும் சேமிப்பு வசதியை வழங்குகிறது. இது ஆண்ட்ராய்ட் 14 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது.

இதன் பின்பக்க கேமரா ஃப்ளாஷ் உடன் 13 மெகாபிக்சல் கொண்டுள்ள நிலையில், முன்பக்க கேமரா 8 மெகாபிக்சல் அளவில் உள்ளது. இதன் குவாட் ஜேபிஎல் ஸ்பீக்கர்கள் (quad JBL speakers) டால்பி அட்மாஸ் (Dolby Atmos) உடன் இயங்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளன. இது IP52 எனப்படும் தூசு மற்றும் நீர் பாதுகாப்பு தரத்தைக் கொண்டுள்ளது.

இதிலுள்ள ஸ்மார்ட் கனெக்ட் வசதி மூலம் இதனை கணினி உடன் இணைத்துக் கொள்ளலாம்.

10,200 mAh பேட்டரி திறனுள்ள இந்த டேப்லட் சாதனம் 45W சார்ஜர் உடன் அதிவேக சார்ஜிங் திறனைக் கொண்டுள்ளது. இது, 615 கிராம் எடை உள்ளது.

இரு வகைமைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த டேப்லட் சாதனம் பேண்டோன் பிரான்ஸ் க்ரீன் நிறத்தில் (Pantone Bronze Green shade) கிடைக்கின்றது.

மோட்டோ பேட் 60 ப்ரோ டேப்லட் (Moto Pad 60 Pro)

1. 8GB RAM + 128GB சேமிப்பு வசதி (Storage) :

  • விலை:ரூ. 26,999

  • சேமிப்பு வகை (Storage) : UFS 3.1

  • அறிமுக விலை: ரூ. 24,999

2. 12GB RAM + 256GB சேமிப்பு வசதி (Storage) :

  • விலை: ரூ. 28,999

  • சேமிப்பு வகை (Storage) : UFS 4.0 (வேகத் திறன் கொண்டது)

  • அறிமுக விலை: ரூ. 26,999

இதில், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு ரூ. 2,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இன்று (ஏப். 17) அறிமுகப்படுத்தப்பட்ட டேப்லட் மற்றும் லேப்டாப் வருகிற ஏப். 23 முதல் அமேசான், ஃப்ளிப்கார்ட் மற்றும் நேரடி விற்பனையகங்களில் விற்பனைக்கும் வரும்

ரூ.8,346 கோடி வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாத எம்.டி.என்.எல்!

புதுதில்லி: பொதுத் துறை நிறுவனமான, எம்.டி.என்.எல். ஏழு பொதுத் துறை வங்கிகளிடமிருந்து ரூ.8,346.24 கோடி மதிப்புள்ள வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்த தவறியுள்ளதாக நிறுவனம் தனது ஒழுங்குமுறை தாக்கல் செய... மேலும் பார்க்க

மார்ச்சில் புதிதாக 4,440 5ஜி நிலையங்கள்!

நாட்டில் மார்ச் மாதத்தில் மட்டும் கூடுதலாக 4,440 5ஜி இணைய சேவைக்கான நிலையங்கள் (கோபுரங்கள்) அமைக்கப்பட்டுள்ளன. குஜராத் மாநிலம் காந்தி நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வோடாஃபோன் ஐடியா நிறுவனம் பு... மேலும் பார்க்க

19 சதவீதம் சரிந்த வீடுகள் விற்பனை

கடந்த ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 19 சதவீதம் சரிந்துள்ளது. இது குறித்து வீடு-மனை ஆலோசனை நிறுவனமான ப்ராப்டைகா் வெளியிட்டுள்ள ‘ரியல் இன்சைட்’ அறிக்கையில்... மேலும் பார்க்க

சீன கப்பல்களுக்கு துறைமுகக் கட்டணம்: டிரம்ப் அரசு திட்டம்

சீன சரக்குக் கப்பல்களுக்கு சிறப்பு துறைமுகக் கட்டணம் விதிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: கப்பல் கட்டும் தொழிலில் ... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப்பில் புதிய அம்சம் அறிமுகம்!

வாட்ஸ்ஆப் செயலியில் ஸ்டிக்கர் பயன்படுத்துவதை எளிதாக்கும் வகையில் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.பயனர்கள் நண்பர்களுடன் உரையாடும்போது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்காக ஸ்டிக்கர் ஆப்ச... மேலும் பார்க்க

சுஸுகி இரு சக்கர வாகன விற்பனை 11% அதிகரிப்பு

முன்னணி இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சுஸுகி மோட்டாா்சைக்கிள் இந்தியா, கடந்த 2024-25 ஆம் நிதியாண்டில் 11 சதவீத விற்பனை வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டு... மேலும் பார்க்க