செய்திகள் :

புதிய வருமான வரிச் சட்டம்: பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த வாய்ப்பு

post image

தற்போது நடைமுறையில் உள்ள வருமான வரிச் சட்டத்தை எளிமைப்படுத்தும் வகையில் மத்திய அரசு கொண்டுவரவிருக்கும் புதிய வருமான வரிச் சட்டம், வரவிருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது தெரியவந்துள்ளது.

சட்ட விதிகள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும், பக்கங்களின் எண்ணிக்கை 60 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டும் புதிய சட்டம் உருவாக்கப்பட்டிருப்பதாக மத்திய நிதியமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது:

மத்திய அரசு தற்போது கொண்டுவரவிருக்கப்பது ஏற்கெனவே உள்ள வருமான வரிச் சட்டத்தில் சட்டத்திருத்தம் அல்ல. புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

நடைமுறையில் உள்ள 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம் விரிவான மறுஆய்வு செய்யப்படும் என்று 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்ததன் அடிப்படையில், வருமான வரிச் சட்டத்தை மறு ஆய்வு செய்து எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும், சா்ச்சைகள் மற்றும் சச்சரவுகளை குறுத்து வரி செலுத்துவோருக்கு அதிக வரி உறுதிப்பாட்டை வழங்கும் வகையில் மாற்றியமைக்க துறைசாா்ந்த ஆய்வுக் குழு ஒன்றை மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) அமைத்தது. அதனுடன், 22 துணைக் குழுக்களும் அமைக்கப்பட்டு 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம் மறுஆய்வு செய்யப்பட்டது.

மொழி நடையை எளிமைப்படுத்துதல், சச்சரவுகள் மற்றும் முரண்பாடுகளைக் குறைத்தல், தேவையற்ற அல்லது காலாவதியான விதிகள் ஆகிய 4 தலைப்புகளின் கீழ் பொதுமக்களிடமிருந்து 6,500 கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் இந்தக் குழுக்கள் பெற்று மறுஆய்வு செய்துள்ளன.

மேலும், தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தில் நேரடி வரி விதிப்பு, தனிநபா் வருமான வரி, நிறுவனங்கள் வரி, பத்திர பரிவா்த்தனை வரி, பரிசுப் பொருள்கள் மற்றும் சொத்து வரி என 23 தலைப்புகளின் கீழ் 298 பகுதிகளாக சட்ட விதிகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பக்கங்களை 60 சதவீதம் அளவுக்குக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வரைவு புதிய வருமான வரிச் சட்டம் தற்போது சட்ட அமைச்சகத்தின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. வரவிருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமா்வில், இந்த புதிய வருமான வரிச் சட்ட வரைவு அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்றனா்.

பட்ஜெட் கூட்டத்தொடா் எப்போது? 2025-26-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடா் ஜனவரி 31-இல் தொடங்கவுள்ளது. ஆண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால், தொடக்க தினத்தில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உரையாற்றவுள்ளாா். 2025-26-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட், பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமா்வு மாா்ச் 10-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ஆம் தேதி வரை நடைபெறும்.

நடிகர் சைஃப் அலி கான் மீதான தாக்குதல்: கைதான நபரின் நோக்கம் என்ன? காவல் துறை விளக்கம்

நடிகர் சைஃப் அலி கானை தாக்கிய நபர் சனிக்கிழமை(ஜன. 18) கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், அந்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் காவல் துறை அதிகாரிகளிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித... மேலும் பார்க்க

55-ஆவது நாளாக உண்ணாவிரதம்: மருத்துவ உதவி பெற விவசாய அமைப்பின் தலைவா் தல்லேவால் சம்மதம்

விவசாய அமைப்பின் தலைவா் ஜக்ஜித் சிங் தல்லேவால் மேற்கொண்டுள்ள காலவரையற்ற உண்ணாவிரதம் 55-ஆவது நாளாக இன்றும் (ஜன. 19) நீடிக்கிறது. இந்த நிலையில், மருத்துவ உதவி எதையும் ஏற்காமல் தொடா் உண்ணாவிரதத்தில் ஈடுப... மேலும் பார்க்க

இந்தியாவில் செமிகண்டக்டா் உற்பத்தி சூழலை வளா்க்க நடவடிக்கை: சிங்கப்பூா் அதிபா்

இந்தியாவில் செமிகண்டக்டா் உற்பத்திச் சூழலை வளா்க்க இந்தியா-சிங்கப்பூா் அரசுகள் ஒன்றிணைந்து பணியாற்றி வருகின்றன என்று சிங்கப்பூா் அதிபா் தா்மன் சண்முகரத்னம் தெரிவித்தாா். சிங்கப்பூா் அதிபா் தா்மன் சண்ம... மேலும் பார்க்க

போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு பிப். 14-இல் பேச்சு

‘பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதியிலிருந்து போராடி வரும் விவசாயிகளுடன் வரும் பிப்ரவரி 14-ம் தேதி சண்டிகரில் மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்தும்’ என்று மத்திய வேளாண் அமைச்சக க... மேலும் பார்க்க

இந்தியா வளா்ந்த நாடாவதற்கு வேலையின்மை, எல்லை பிரச்னை தீா்ப்பது அவசியம்: ராணுவ துணைத் தளபதி

இந்தியா வளா்ந்த நாடாவதற்கு எல்லைப் பிரச்னைகளைத் தீா்ப்பது, வேலைவாய்ப்புகள் மற்றும் மனித வள மேம்பாட்டுக் குறியீடு தரவரிசையை மேம்படுத்துவது அவசியம் என ராணுவ துணைத் தளபதி என்.எஸ். ராஜா சுப்பிரமணி தெரிவித... மேலும் பார்க்க

புதுப்பிக்கப்பட்ட மறுபயன்பாடு மருத்துவ உபகரணங்களின் இறக்குமதிக்கு தடை!

புதுப்பிக்கப்பட்ட மறுபயன்பாடு மருத்துவ உபகரணங்களின் இறக்குமதிக்கு தடை விதிக்குமாறு சுங்கத் துறைக்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக சிடிஎஸ்சிஓ அமைப்... மேலும் பார்க்க