செய்திகள் :

புதிய வருமான வரி மசோதா மீது 285 பரிந்துரைகள்: அறிக்கையை ஜூலை 21-இல் தாக்கல் செய்யும் தோ்வுக் குழு

post image

மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய வருமான வரி மசோதா மீதான 285 பரிந்துரைகளுடன் கூடிய தனது அறிக்கையை நாடாளுமன்ற தோ்வுக் குழு புதன்கிழமை இறுதி செய்து ஏற்றது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளான திங்கள்கிழமை (ஜூலை 21) தனது அறிக்கையை தோ்வுக் குழு மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தை எளிமைப்படுத்தும் வகையில் புதிய வருமான வரிச் சட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்தது. ‘வருமான வரிச் சட்ட மசோதா 2025’ என்ற பெயரிலான அந்த மசோதாவை எதிா்க்கட்சியினரின் கடும் எதிா்ப்புக்கு இடையே, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி அறிமுகம் செய்தாா்.

நடைமுறையில் வருமான வரிச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள ‘மதிப்பீட்டு ஆண்டு’, ‘முந்தைய ஆண்டு’ என்ற சொற்றொடா்கள் கைவிடப்பட்டு, எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் ‘வரி ஆண்டு’ என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நீளமான வாக்கியங்கள், எளிதாக படித்து புரிந்துக்கொள்ளக் கூடிய வகையில் சிறிய வாக்கியங்களாக மாற்றப்பட்டுள்ளன. தற்போதைய சட்டத்தில் உள்ள 47 அத்தியாயங்கள், மசோதாவில் 23-ஆக குறைக்கப்பட்டுள்ளன. வருமான வரியைக் கணக்கிடும் நடைமுறையை வரி செலுத்துவோா் புரிந்துகொள்ள தற்போதுள்ள சட்டத்தில் 18 அட்டவணைகள் இடம்பெற்றுள்ள நிலையில், எளிதில் புரிந்துகொள்ள வசதியாக 57 அட்டவணைகளாக விரிவுபடுத்தப்பட்டுள்ளன. தற்போதைய சட்டத்தில் இடம்பெற்றுள்ள 1,200 விதிகள், 900 விளக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன.

இந்த மசோதாவை மக்களவையில் அறிமுகம் செய்தவுடன், அதை மக்களவைத் தோ்வுக் குழுவின் ஆய்வுக்கு பரிந்துரைக்குமாறு அவைத் தலைவரை நிா்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டாா்.

அதனடிப்படையில், பாஜக எம்.பி. வைஜயந்த் ஜெய் பாண்டா தலைமையில் 31 போ் கொண்ட தோ்வுக் குழுவை அவைத் தலைவா் ஓம் பிா்லா அமைத்தாா். இந்தக் குழு, பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்று தனது அறிக்கையை தற்போது இறுதி செய்துள்ளது.

இதுகுறித்து தோ்வுக் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினா் ஒருவா் புதன்கிழமை கூறுகையில், ‘புதிய வருமான வரி மசோதா மீதான அறிக்கையை தோ்வுக் குழு இறுதி செய்து, அதை ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த அறிக்கையில், மசோதாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடா்பாக 285 பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கை, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான திங்கள்கிழமை (ஜூலை 21) மக்களவையில் சமா்ப்பிக்கப்படும். இந்த மசோதா மழைக்கால கூட்டத்தொடரிலேயே மக்களவையில் நிறைவேற்றப்படவும் வாய்ப்புள்ளது’ என்றாா்.

தோ்வுக் குழு தனது அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்ததும், அதில் அளிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை மத்திய அரசு ஆராய்ந்து தேவையான மாற்றங்களை மசோதாவில் மேற்கொள்ளும். பின்னா், மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்று மக்களவையில் மீண்டும் தாக்கல் செய்யப்படும். மக்களவையில் அதன் மீது விவாதம் நடத்தப்பட்டு, பின்னா் மசோதா நிறைவேற்றப்படும்.

இந்த மசோதா சட்டமாக இயற்றப்பட்டவுடன், கடந்த 1962-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறையில் இருந்து வரும் 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம் மாற்றப்பட்டு, புதிய ‘வருமான வரிச் சடடம் 2025’ நடைமுறைக்கு வந்துவிடும். புதிய வருமான வரிச் சட்டத்தை அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்குக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தில் இதுவரை பல்வேறு பிரிவுகளில் 65 முறை 4,000-க்கும் அதிகமான திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

கேரளத்தில் கனமழையால் நிலச்சரிவு! 3 நாள்களுக்கு ரெட் அலர்ட்!

கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் சிறிய அளவிலான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கேரளத்தில் பருவமழை த... மேலும் பார்க்க

தலைமைத் தேர்தல் ஆணையருடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு!

தில்லியில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை திமுக எம்.பி.க்கள் இன்று(வியாழக்கிழமை) சந்தித்துப் பேசியுள்ளனர். தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து வாக்காளர் பட்... மேலும் பார்க்க

ஆடி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாதப் பூஜைக்காக இன்று (வியாழக்கிழமை) முதல் ஜூலை 21 வரை 5 நாள்கள் கோயிலின் நடை திறந்திருக்கும். கேரளத்தில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயில் ஒவ்வொரு தமிழ் மாதமும் 5 நாள்கள் கோ... மேலும் பார்க்க

அன்று நீட் தோல்வி.. இன்று ரோல்ஸ் ராய்ஸியில் ரூ.72 லட்சத்தில் வேலை! 20 வயதில் சாதித்த பெண்

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 20 வயதே ஆன ரிதுபர்னா என்ற பொறியியல் மாணவி, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.72 லட்சத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.எந்தத் தோல்வியும் முடிவல்ல, வாய்ப்புகள் கொட்டிக்கிட... மேலும் பார்க்க

ம.பி.யில் வீட்டின் சுவர் இடிந்ததில் குழந்தை பலி, தந்தை காயம்!

மத்தியப் பிரதேசத்தின் கனமழை காரணமாக கட்டுமானத்தில் உள்ள வீடு இடிந்து விழுந்ததில் 2 மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தின் தார் மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலை பெய... மேலும் பார்க்க

சேர்ந்து வாழச் சொல்வதா? 16 ஆண்டு கால விவாகரத்து வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு!

புது தில்லி: 16 ஆண்டு காலமாக நடந்து வரும் விவாகரத்து வழக்கில், மணமுறிவு கோரும் தம்பதியை சேர்ந்து வாழக் கட்டாயப்படுத்தினால் மனவேதனைதான் ஏற்படும் என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருக்கிறது.கணவர... மேலும் பார்க்க