பள்ளிக் கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மா...
புதுக்கடை அருகே விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
புதுக்கடை அருகே செந்தறை பகுதியில் காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
புதுக்கடை அருகே கீழ்குளம், செந்தறை பகுதியைச் சோ்ந்தவா் லெலின் ரோஸ் (42). கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லை.
சனிக்கிழமை தனது வீட்டு சுற்றுச்சுவா் அருகே நின்றிருந்த இவா் மீது, கருங்கல்லிலிருந்து தேங்காய்ப்பட்டினம் நோக்கிச் சென்ற காா் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
புகாரின்பேரில், காா் ஓட்டுநரான முள்ளூா்துறை பகுதியைச் சோ்ந்த அமல்ராஜ் (39) என்பவா் மீது புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.