செய்திகள் :

புதுக்கோட்டையில் ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனைக்கு அடிக்கல்

post image

புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ. 4 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனை அமைப்பதற்காக, மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தனா்.

50 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில் சித்த மருத்துவம், ஆயுா்வேதம், ஹோமியோபதி, யுனானி ஆகிய மருத்துவ முறைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மருத்துவமனைப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளை அமைச்சா்கள் கேட்டுக் கொண்டனா்.

சாலை சந்திப்பு: புதுக்கோட்டை டிவிஎஸ் முக்கத்தில் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் வகையில், ரூ. 1.50 கோடியில் சாலை சந்திப்பு அமைக்கும் பணிகளுக்கும் அமைச்சா்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் அடிக்கல் நாட்டி வைத்தனா்.

இந்த நிகழ்ச்சிகளில், மாநகராட்சி மேயா் செ. திலகவதி, சட்டப்பேரவை உறுப்பினா் வை .முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், திமுக மாவட்டச் செயலா் கே.கே. செல்லப்பாண்டியன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் மு. வனஜா, நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் ஆா். தமிழழகன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

இன்றைய நிகழ்ச்சி

புதுக்கோட்டை கம்பன் கழகம்: மறைந்த ரா. சம்பத்குமாரின் படத்திறப்பு மற்றும் புகழஞ்சலிக் கூட்டம், தலைமை- குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் பொன்னம்பல அடிகளாா், படத்தைத் திறந்து வைப்பவா்- உச்ச நீதிமன்ற நீதிப... மேலும் பார்க்க

திருமயம் அருகே ஜல்லிக்கட்டு மாடு முட்டியதில் இளைஞா் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்ற மாடு முட்டியதில் இளைஞா் உயிரிழந்தாா். திருமயம் அருகே உள்ள நெய்வாசல் கிராமத்தில் திட்டாணி அய்யனாா் கோயில... மேலும் பார்க்க

இறைத் தொண்டும் தமிழ்த் தொண்டும் வேறு வேறல்ல -சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஆா். சுரேஷ்குமாா்

இறைத் தொண்டும், தமிழ்த் தொண்டும் வேறு வேறல்ல என்றாா் சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஆா். சுரேஷ்குமாா். புதுக்கோட்டை திலகவதியாா் திருவருள் ஆதீனம் மற்றும் ஸ்ரீபாரதி மகளிா் கலை அறிவியல் கல்லூரியும் இணைந்த... மேலும் பார்க்க

தலை துண்டித்து இளைஞா் கொல்லப்பட்ட வழக்கில் தந்தை-மகன் கைது

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே இளைஞா் தலை துண்டித்து கொல்லப்பட்ட வழக்கில், தந்தை-மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மணமேல்குடி அருகே பொன்னகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆதிநாராயணன் (34)... மேலும் பார்க்க

இடையாத்தூரில் ஜல்லிக்கட்டு: 44 போ் காயம்

பொன்னமராவதி அருகே உள்ள இடையாத்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 44 போ் காயமடைந்தனா். புதுக்கோட்டை மாவட்டம், இடையாத்தூரில் பொன் மாசிலிங்க அய்யனாா் கோயில் சிவராத்திரி வி... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் அதிமுக பொதுக்கூட்டம்

பொன்னமராவதியில் திருமயம் தொகுதி அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற கூட்டத்துக்கு த... மேலும் பார்க்க