4வது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவு! ஐடி, வங்கித் துறை கடும் வீழ்ச்சி!
புதுச்சேரியில் கடல் சீற்றம்: சுற்றுலாப் பணிகளுக்கு அனுமதி மறுப்பு!
புதுச்சேரி கடலில் அலைகள் சீற்றம் காரணமாக கடற்கரைக்கு வந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கடலில் இறங்க விடாமல் போலீசார் எச்சரித்தனர்.
புதுச்சேரியின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குவது கடற்கரை சாலை. 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த சாலையை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து பார்த்து மகிழ்வது வழக்கம். தற்போது குளிர்ந்த காற்றுடன் ரம்மியமான சூழ்நிலை நிலவுவதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு வந்து கடற்கரை அழகை ரசித்துச் செல்கின்றனர்.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் காரணமாக புதுச்சேரி கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகளைக் கடற்கரை மணலில் இறங்க போலீசார் தடை விதித்துள்ளனர். கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டையொட்டி ஏராளமான வெளிநாட்டவர் புதுச்சேரிக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
உள்ளூர் மக்களும், வெளி மாநில மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் கடற்கரைக்கு வந்து கடல் அழகை ரசித்து நிற்க அனுமதிக்கும் போலீசார், அவர்கள் கடற்கரையில் இறங்க முயற்சிக்கும்போது, வானிலை எச்சரிக்கையைக் கூறி அறிவுறுத்தி அவர்களை வெளியேற்றினர்.