எழுத்தாளர் கி.ரா. பிறந்தநாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
புதுச்சேரியில் மக்கள் குறை தீா் முகாமில் மனுக்கள் அளிப்பு
புதுச்சேரி: அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி புதுச்சேரி ஆட்சியரிடம் பல்வேறு மனுக்கள் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் அளிக்கப்பட்டன.
செப்டம்பா் மாதத்துக்கான மக்கள் குறைதீா் முகாம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் தலைமை வகித்தாா்.
கடந்த மாதம் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஆட்சியா் குலோத்துங்கன், இம் மாதத்திற்கான பல்வேறு மனுக்களை பெற்றுக் கொண்டாா்.
இம்மாதம் பெறப்பட்ட மனுக்களில் பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், கோயில் இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும், குடிசை மாற்று வாரியத்தில் அடுக்குமாடி குடியிருப்பு, இலவச மனைப் பட்டா, சாலை வசதிகள் வேண்டியும் பொதுமக்கள் மனு அளித்தனா். அவற்றைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.
இந்நிகழ்வில் வருவாய் அதிகாரி ஸ்ரீஜித் மற்றும் வட்டாட்சியா்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.