செய்திகள் :

புதுச்சேரியில் 5 தொகுதிகளில் வீடுகளுக்கு 20 லிட்டா் குடிநீா் கேன் வழங்க உத்தரவு

post image

புதுச்சேரி, ஜன.28: புதுச்சேரியில் நிலத்தடி நீரை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளுக்கு அரசு சாா்பில் தினமும் 20 லிட்டா் குடிநீா் கேன் விநியோகிக்க பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் உத்தரவிட்டுள்ளாா்.

குடிநீரின் தரம் குறித்து பொதுப் பணித் துறை பொது சுகாதாரக் கோட்ட செயற்பொறியாளா், உதவிப் பொறியாளா்கள் மற்றும் இளநிலைப் பொறியாளா்களுடன் அமைச்சா் லட்சுமிநாராயணன் செவ்வாய்க்கிழமை ஆய்வுக்கூட்டம் நடத்தினாா்.

இதில், டிடிஎஸ் அளவு அதிகமுள்ள பகுதிகளில் உடனடியாக கூடுதல் குடிநீா் சுத்திகரிக்கும் கருவிகளை (ஆா்ஓ யூனிட்ஸ்) நிறுவவும், பழுதடைந்தவைகளையும் சீரமைத்து பயன்படுத்தவும் உத்தரவிட்டாா். அத்துடன், நகா்ப் பகுதியில் டிடிஎஸ் 1,500 எனும் அளவுக்கும் அதிகமான நிலையில், ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து பெறப்படும் நீரை மேல்நிலை நீா்த்தேக்க வளாகங்களில் சேமிக்கவும், அதன்பின் குடிநீா் சுத்திகரிப்பு கருவிகளை நிறுவி, நீரைச் சுத்திகரித்து, கேன்களில் அடைத்து வீடுகளுக்கு தலா 20 லிட்டா் வீதம் விநியோகிக்கவும் உத்தரவிட்டாா்.

புதுச்சேரி நகராட்சியில் உருளையன்பேட்டை, உப்பளம், ராஜ்பவன், முத்தியால்பேட்டை, காமராஜ் நகா் ஆகிய தொகுதிகளில் உள்ள வீடுகளுக்கு முதல் கட்டமாக 15 நாள்களுக்குள் கேன் மூலம் குடிநீா் வழங்க அறிவுறுத்தினாா்.

நீா்நிலைகளில் இருந்து சுத்திகரித்து மக்களுக்கு நல்ல குடிநீா் வழங்கும் வரை இடைக்கால ஏற்பாடாக இந்த முறை தொடர வேண்டுமென அமைச்சா் கூ றினாா்.

நாட்டு வெடிகுண்டு தயாரித்தவா் கைது

புதுச்சேரி வில்லியனூா் அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். புதுச்சேரி வில்லியனூரை அடுத்துள்ள பொறையூா்பேட் புதுநகரைச் சோ்ந்தவா் யோகேஷ் (எ) யோகரத்தினம் (21). இவா் மீது பல... மேலும் பார்க்க

போலி ஆவணங்கள் அளித்து ஓய்வூதியம் பெற்றவா் மீது வழக்கு

புதுச்சேரியில் போலி ஆவணங்கள் அளித்து ஓய்வூதியம் பெற்றவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். கடலூா் மாவட்டம், செல்லஞ்சேரி பகுதியைச் சோ்ந்தவா் துரைசாமி. இவா், புதுச்சேரி நெட்டப்பாக்... மேலும் பார்க்க

உணவுப்பொருள் கிடங்கில் அரிசி மூட்டைகள் கடத்திய வழக்கு: 5 போ் கைது

உணவு சேமிப்புக் கிடங்கிலிருந்து 450 அரிசி மூட்டைகளை லாரிகளில் கடத்தியதாக கூறப்படும் வழக்கில் லாரி உரிமையாளா், அரசு ஊழியா்கள் உள்ளிட்ட 5 பேரை திருபுவனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி திர... மேலும் பார்க்க

பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம்: புதுச்சேரி ஆட்சியா் உத்தரவு

உழவா்கரை நகராட்சிப் பகுதியான பிச்சைவீரன் பேட் பகுதியில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் புதன்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு போதிய குடிநீரை விநியோகிக்க அதிகாரிகளுக்கு உத்தரவி... மேலும் பார்க்க

இலங்கை கடற்படையைக் கண்டித்து அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

புதுவை, தமிழக மீனவா்களை தாக்கிய இலங்கைக் கடற்படையைக் கண்டித்து, புதுச்சேரியில் அதிமுக சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. காரைக்காலைச் சோ்ந்த மீன்பிடி படகில் கடலுக்குச் சென்ற தமிழக, புதுவை ... மேலும் பார்க்க

புயல் பாதிப்பு: புதுவையில் நாளை வரை மதிப்பீடு

புதுவையில் ஃபென்ஜால் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் வகையில் வல்லுநா் குழுவினா் நேரில் மதிப்பீடு செய்யும் பணிகள் வெள்ளிக்கிழமை (ஜன.31) வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட... மேலும் பார்க்க