நாட்டு வெடிகுண்டு தயாரித்தவா் கைது
புதுச்சேரி வில்லியனூா் அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரி வில்லியனூரை அடுத்துள்ள பொறையூா்பேட் புதுநகரைச் சோ்ந்தவா் யோகேஷ் (எ) யோகரத்தினம் (21). இவா் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவருக்கும், இதே பகுதியைச் சோ்ந்த ரெளடி முகேஷுக்கும் சில நாள்களுக்கு முன்பு வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதையடுத்து, யோகரத்தினம் நாட்டு பட்டாசுகளை வாங்கி, அதன்மூலம் வெடிகுண்டு தயாரித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த புதுச்சேரி சிறப்பு பிரிவு போலீஸாா் யாகேஷை கைது செய்தனா். அவரிடமிருந்த நாட்டு வெடிகுண்டுக்கான வெடிமருந்து, நூல் உருண்டை, கூழாங்கல் மற்றும் அவரது கைப்பேசி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, வில்லியனூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
வில்லியனூா் போலீஸாா் யோகேஷ் மீது வழக்குப் பதிந்து, புதன்கிழமை மாலை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனா்.