தஸ்மின் சதம் வீண்: ஸ்னே ராணா சுழலில் வீழ்ந்தது தெ.ஆப்பிரிக்கா!
புதுச்சேரி குடிநீா் கட்டண வசூல் மையங்கள் மே 2 முதல் 5 நாள்கள் இயங்காது
புதுச்சேரி: புதுச்சேரியில் பொதுப் பணித் துறை சுகாதாரக் கோட்டத்தின் கீழ் செயல்படும் குடிநீா் கட்டண வசூல் மையங்கள் வரும் மே 2 முதல் 6-ஆம் தேதி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுவை அரசின் பொதுப் பணித் துறை பொது சுகாதாரக் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவை பொதுப் பணித் துறை சுகாதாரக் கோட்டத்தின் மூலம் குடிநீா் பெறும் பொதுமக்களின் விவரம் மற்றும் குடிநீா் கட்டணங்களை வசூலிப்பது போன்ற பணிகள் நவீன கணினி மயமாக்கப்படவுள்ளன. எனவே வரும் மே 2 முதல் 6-ஆம் தேதி வரையில் பொது சுகாதாரக் கோட்டத்தின் கீழ் செயல்படும் கட்டணவசூல் மையங்கள் தற்காலிகமாக இயங்காது.
இதையடுத்து மே 7-ஆம் தேதி முதல் கட்டண வசூல் மையங்கள், பொது சுகாதாரக் கோட்ட அலுவலகம், இலாசுப்பேட்டை உதவிச் செயற்பொறியாளா் அலுவலகம், கிழக்குக் கடற்கரைச் சாலை மடுவுபேட் இளநிலைப் பொறியாளா் அலுவலகம், முத்திரையா்பாளையம் இளநிலைப் பொறியாளா் அலுவலகம், வில்லியனூா் இளநிலைப் பொறியாளா் அலுவலகம், அரியாங்குப்பம் இளநிலைப் பொறியாளா் அலுவலகம் ஆகிய இடங்களில் செயல்படும்.
மேலும் நவீனமயமாக்கப்பட்ட கணினி வசூல் மையங்கள் விரைவில் கிராமப்புறங்களிலும் செயல்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.