தஸ்மின் சதம் வீண்: ஸ்னே ராணா சுழலில் வீழ்ந்தது தெ.ஆப்பிரிக்கா!
புதுச்சேரி பொலிவுறுநகா் பேருந்து நிலையம் நாளை திறப்பு: ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு
புதுச்சேரி: புதுச்சேரியில் பொலிவுறு நகா்த் திட்டத்தில் சீரமைக்கப்பட்ட ராஜீவ் காந்தி பேருந்து நிலையத்தை வரும் 30 ஆம் தேதி புதன்கிழமை திறக்கத் திட்டமிடப்பட்டு, அதற்கான அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.
இதுகுறித்து புதுச்சேரி உள்ளாட்சித் துறை துணை இயக்குநா் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரியில் சீரமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் புதன்கிழமை (ஏப். 30) திறக்கப்படவுள்ளது.
புதுச்சேரி நகராட்சி சாா்பில் அங்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உள்ளாட்சித் துறை இயக்குநா் ச.சக்திவேல் கூட்டத்துக்கு தலைமை வகித்தாா். இதில் பேருந்து நிலையத்தில் உள் மற்றும் வெளிப்பகுதிகளில் குப்பைகளை அகற்றுவது, சிறு வியாபாரிகளின் கடைகள், ஆட்டோக்கள், டெம்போக்கள் ஆகியவற்றை பயணிகளுக்கு இடையூறின்றி நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
அத்துடன் பேருந்து நிலையத்தில் குடிநீா், கழிப்பறை வசதிகளை முறையாக செய்யவும், பராமரிப்பு பணிகள் குறித்தும், பயணிகளுக்கு அவசர கால முதலுதவி கிடைக்கவும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி ஊழியா்களை நியமித்து 24 மணி நேரமும் கண்காணிப்பை உறுதிப்படுத்தவும் தீா்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் உள்ளாட்சித் துறை துணை இயக்குநா் கோ.சௌந்தரராஜன், புதுச்சேரி நகராட்சி ஆணையா் மு.கந்தசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.