கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!
புதுச்சேரி முதல்வர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வீட்டிற்கும் மின்னஞ்சல் மூலம் மீண்டும் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், துணைநிலை ஆளுநர் அலுவலகம், தீயணைப்புத்துறை ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இன்று முதல்வர் வீடு, கடற்கரைச் சாலையில் உள்ள நட்சத்திர உணவகம் மற்றும் ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள ஒரு உணவகம் என 7 இடங்களுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.