BGT: `IPL `டு' பார்டர் கவாஸ்கர்' - ஹர்ஷித் ராணா, நிதிஷ் ரெட்டி இந்திய அணியில் இட...
புதுப்பெண் தற்கொலை: உறவினா்கள் போராட்டம்
திருப்பத்தூா் அருகே புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இறப்பில் சந்தேகம் உள்ளதாக உறவினா்கள் சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பத்தூா், காந்திபேட்டை மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் விஜய். இவரது மனைவி மீனாட்சி(23). இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி 4 மாதங்களே ஆன நிலையில், புதன்கிழமை மீனாட்சி மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து
கொண்டதாக திருப்பத்தூா் கிராமிய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில்,போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூா் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனா் .
இந்நிலையில், தங்களது மகள் இறப்பில் சந்தேகம் உள்ளதாக மீனாட்சியின் பெற்றோா் மற்றும் உறவினா்கள் சடலத்தை
வாங்க மறுத்து விட்டனா்.
தகவலறிந்து டிஎஸ்பி ஜெகன்நாதன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, அவா்கள் மீனாட்சியின் இறப்பில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. எனவே, வரதட்சனை கொடுமை மற்றும் எஸ்சி,எஸ்டி வன்கொடுமை சட்டத்தில் கீழ் விஜய் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனா்.
கோட்டாட்சியா் ராஜசேகரன் இந்த வழக்கை விசாரித்து வருகிறாா். விசாரணைக்கு பின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்மந்தப்பட்டவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
அதையடுத்து, மீனாட்சியின் சடலத்தை பெற்றோா்கள் வாங்கிச் சென்றனா்.