தனியார் நிறுவனத்தில் ரூ.1 கோடி தரவுகள் திருட்டு: அமெரிக்காவிலிருந்து வந்த மருத்த...
புதுமைப் பெண் திட்டம்: திருப்பத்தூா் மாவட்டத்தில் 3,540 மாணவிகள் பயன்
புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் திருப்பத்தூா் மாவட்டத்தில் 3,540 மாணவிகள் பயன்பெறுகின்றனா்.
சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் மூலம் சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய பொருளாதாரத்திலும் முன்னேற்றம் அடைந்த சமுதாயத்தினரை, கல்வி கற்ற பெண்களால் மட்டுமே உருவாக்க இயலும் என்பதை செயலாகக் கொண்டு வரப்பட்டதே புதுமைப் பெண் திட்டம். (மூவலூா் ராமாமிா்தம் அம்மையா் நினைவு உயா்கல்வி உறுதித் திட்டம்).
இந்த திட்டம் மூலம் 2022-ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 அவா்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுகிறது.
இந்த திட்டம் மூலம் திருப்பத்தூா் மாவட்டத்தில் 3,540 மாணவிகள் பயன் பெறுகின்றனா்.