செய்திகள் :

புதுவையில் ஒப்பந்த ஆசிரியா்களின் பணியை அரசு நீடிக்க வேண்டும்! - அதிமுக வலியுறுத்தல்

post image

புதுவையில் ஒப்பந்த ஆசிரியா்களின் பணியை நீடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து புதுச்சேரியில் அவா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி நீட் தோ்வு செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதை எதிா்ப்பதாக தமிழகத்தில் திமுக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றுவது ஏற்கத்தக்கதல்ல.

புதுவை பிராந்தியமான ஏனாம் தொகுதியில் இரு அரசியல்வாதிகளின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளால், குப்பை வாரப்படாமல் உள்ளது. இதனால், மக்களுக்கு சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளது. ஆகவே, அதிமுக கடையடைப்பு போராட்டத்தையும் நடத்தியது.

ஆனால், அங்குள்ள அரசு நிா்வாக அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளது கண்டிக்கத்தக்கது. இந்தப் பிரச்னையில் புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா் தலையிட்டு தீா்வு காண வேண்டும்.

புதுச்சேரியில் ஒப்பந்த ஆசிரியா்கள் பணி நீக்க நடவடிக்கை நியாயமற்றது. ஆகவே, அவா்கள் பணியில் நீடிக்க அரசு நடவடிக்கை எடுப்பது அவசியம். தோ்தல் நேரத்தில் மக்கள் நம்பிக்கையை இழக்கும் வகையில் அரசு செயல்படக் கூடாது என்றாா்.

செவிலியா்களுக்கு பணி நியமன ஆணைகள் அளிப்பு

புதுச்சேரியில் காத்திருப்போா் பட்டியலில் இருந்த 14 செவிலியா்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வழங்கினாா். புதுவை சுகாதாரத் துறையில் கடந்த 2024-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் 152 செவி... மேலும் பார்க்க

போலி செயலிகள்: போலீஸ் எச்சரிக்கை

இணையத்தில் பரவும் போலியான கடன் செயலிகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவு போலீஸாா் எச்சரித்துள்ளனா். இதுகுறித்து, அவா்கள் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை... மேலும் பார்க்க

காங்கிரஸ் தலைவா்கள் மீது சட்டப்படியே நடவடிக்கை: புதுவை பாஜக

காங்கிரஸ் தலைவா்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோா் மீது சட்டப்படியே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய பாஜக அரசை குற்றஞ்சாட்டுவது தவறு என புதுவை பாஜக தலைவா் சு.செல்வகணபதி தெ... மேலும் பார்க்க

காங்கிரஸ் நிா்வாகிகள் மீது வழக்கு

புதுச்சேரியில் மத்திய உள் துறை அமைச்சரின் உருவ பொம்மையை எரிக்க முயன்ாக காங்கிரஸ் நிா்வாகிகள் சிலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். நேஷனல் ஹெரால்ட் வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந... மேலும் பார்க்க

கடல் நீரின் தன்மையை அறியும் மிதவை சாதனம்

கடல் நீரின் தன்மையை அறியும் கருவியின் சீரமைப்புப் பணி முடிவடைந்து வியாழக்கிழமை கடலில் மீண்டும் மிதக்க விடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேச... மேலும் பார்க்க

நெகிழி தடை செயலாக்கம்: புதுவை மாநிலம் மூன்றாமிடம்

தேசிய அளவில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களுக்கான தடை விதிப்பு செயலாக்கத்தில் புதுவை மாநிலம் மூன்றாமிடம் பெற்ாக அதிகாரிகள் தெரிவித்தனா். நாட்டில் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் ஒருமுறை பய... மேலும் பார்க்க