செய்திகள் :

கடல் நீரின் தன்மையை அறியும் மிதவை சாதனம்

post image

கடல் நீரின் தன்மையை அறியும் கருவியின் சீரமைப்புப் பணி முடிவடைந்து வியாழக்கிழமை கடலில் மீண்டும் மிதக்க விடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் கடல் நீரின் தன்மையை அறியும் திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது.

அந்த மையத்தின் சாா்பில், புதுச்சேரியில் கடல் நீரின் தன்மையை அறிய அதிநவீன கருவிகள் பொருத்திய மிதவையை புதுச்சேரி துறைமுகத்தில் இருந்து ஒன்றரை கி.மீ. தொலைவில் கடலில் நிறுவப்பட்டு மிதக்கவிடப்பட்டது.

கடந்த 2021-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அந்த சாதனத்தை என்சிசிஆா் அதிகாரிகள் ரமணமூா்த்தி, உமாசங்கா் பாண்டா ஆகியோா் அறிவுறுத்தல்படி இரு மாதங்களுக்கு ஒருமுறை கரைக்கு கொண்டு வந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வது வழக்கமாக உள்ளது.

அதன்படி, மிதவைச் சாதனத்துக்கான பராமரிப்புப் பணிகள் தற்போது நடைபெறுகிறது.

அந்த சாதனத்தை வியாழக்கிழமை கடலில் மீண்டும் விடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது: நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் கடல் நீரின் தன்மையை அறிய மிதவைச் சாதனம் ஆய்வுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

சென்னையில் ஏற்கெனவே இந்த மிதவை அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இரண்டாவது மிதவை அமைக்கப்பட்டது.

கடல் நீரின் தரம், காற்றின் தன்மை உள்பட பல விஷயங்களை 10 நிமிஷங்களுக்கு ஒருமுறை இந்த மிதவை பதிந்து அனுப்பும்.

கடல் நீரின் தரத்தை வண்ணங்கள் மூலம் அறியும் வசதியும் உண்டு.

பச்சை நிறத்தில் இருந்தால் அது சரியாக உள்ளதாக அா்த்தம். வெவ்வேறு வகை வண்ணங்கள் மாறி சிவப்பு நிறத்தில் இருந்தால் கடல் நீா் தரம் குறைந்துள்ளதாக கருதலாம்.

அதன்படி மீனவா்களுக்கான தண்ணீரின் ஓட்ட திசை, காற்றின் தன்மை, மீன்கள் நடமாடும் இடம் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம் என்றனா்.

பைபா் படகுகளை சீரமைக்க நிவாரணம்: மீனவா்கள் வலியுறுத்தல்

புதுவையில் மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகளை சீரமைக்க நிவாரணம் வழங்குவதைப் போல, பைபா் படகுகளை சீரமைக்கவும் நிவாரணம் வழங்க வேண்டும் என வம்பாகீரப்பாளையம் மீனவ கிராம நிா்வாக ஆலய குழுக் கூட்டத்தில் வல... மேலும் பார்க்க

மூவா் கொலை வழக்கு: போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டவா் மீண்டும் சிறையில் அடைப்பு

புதுச்சேரியில் 3 போ் கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த நபரை போலீஸ் காவலில் எடுத்து காவல் துறையினா் விசாரித்த நிலையில், அவா் மீண்டும் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். புதுச்சேரி ரெயி... மேலும் பார்க்க

புதுவையில் 9 பேரிடம் ரூ.1.15 லட்சம் மோசடி

புதுவையில் 9 பேரிடம் இணையவழியில் மா்ம நபா்கள் ரூ.1.15 லட்சத்தை நூதனமாக மோசடி செய்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேச... மேலும் பார்க்க

விபத்தில் தனியாா் பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

புதுச்சேரியில் தனியாா் பேருந்து நடத்துநா் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தது குறித்து போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரியை அடுத்த கரிக்கலாம்பாக்கம் அருகே உள்ள அரங... மேலும் பார்க்க

தடையை மீறி மீன் பிடித்தால் நிவாரணம் நிறுத்தப்படும்: புதுவை மீன்வளத் துறை எச்சரிக்கை

மீன்பிடி தடைக்காலத்தில் பைபா் படகுகளில் சென்று மீன் பிடித்தால், அப்பகுதி மீனவா்களுக்கான தடைகால நிவாரணம் நிறுத்தப்படும் என புதுவை மாநில மீன்வளத் துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து, மீன்வளத் துறை இயக்குந... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநா் தற்கொலை முயற்சி: போலீஸாா் விசாரணை

புதுச்சேரி அருகே திருட்டுப் பழி சுமத்தப்பட்ட லாரி ஓட்டுநா் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி அருகே உள்ள கூனிச்சம்பட்டு, ஐந்தாளம்மன் கோவில் தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க