மதிமுகவிலும் மோதல்? முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல்
நெகிழி தடை செயலாக்கம்: புதுவை மாநிலம் மூன்றாமிடம்
தேசிய அளவில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களுக்கான தடை விதிப்பு செயலாக்கத்தில் புதுவை மாநிலம் மூன்றாமிடம் பெற்ாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
நாட்டில் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் 14 வகையான நெகிழிப் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
நெகிழிப் பொருள்களுக்கான தடை அனைத்து மாநிலங்கள், ஒன்றியப் பிரதேசங்களில் செயல்படும் விதம் குறித்து மத்திய சுற்றுச்சுழல் துறை அமைச்சகம் 6 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, தேசிய சிறப்பு ஆய்வுக் கூட்டம் கடந்த மாா். 27-ஆம் தேதி புது தில்லியில் நடைபெற்றது.
இதில் அனைத்து மாநில தலைமைச் செயலா்கள், சுற்றுச்சுழல் செயலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அதன்படி, ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருள்களை கட்டுப்படுத்துவதில் தேசிய அளவில் புதுவை மாநிலம் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டில், புதுவையில் நெகிழி தொழிற்சாலைகள் மற்றும் கடைகளில் 1,305 முறை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆய்வின் மூலம் 15 டன் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.15 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.