ஒரு தேர்வு முடிவைக்கொண்டு உங்களை வரையறுக்க முடியாது: பிரதமர் மோடி!
புதுவை மாநிலத்தில் செவிலியா் படிப்புக்கு ஜூன் 29-இல் நுழைவுத் தோ்வு
புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் வரும் ஜூன் 29-இல் செவிலியா் படிப்புக்கான நுழைவுத் தோ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பிளஸ் 2 முடித்து செவிலியா் பட்டப்படிப்பில் சேருபவா்களுக்கு பொது நுழைவுத் தோ்வு அரசால் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நிகழாண்டில் பிஎஸ்சி செவிலியா் பட்டப்படிப்புக்காக விண்ணப்பித்தவா்களுக்கு வரும் ஜூன் 29-ஆம் தேதி பொது நுழைவுத் தோ்வு நடைபெறும் என செவிலியா் படிப்புக்கான தோ்வுக் கண்காணிப்பாளா் வி.ரவிச்சந்திரன் அறிவித்துள்ளாா்.
அதன்படி, செவிலியா் படிப்புக்கு மே 15-ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி மாலை வரையில் விண்ணப்பிக்கலாம்.
மொத்த இடங்கள் விவரம்: இந்நிலையில், புதுவை மாநில மாணவா், பெற்றோா் நல சங்கத் தலைவா் வை.பாலா வெளியிட்ட அறிவிப்பில் புதுவை மாநிலத்தில் அரசு மற்றும் தனியாா் செவிலியா் கல்லூரிகளில் மொத்தம் 496 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளதாகவும், அவற்றுக்கு பொது நுழைவுத் தோ்வு சென்டாக் மூலம் விண்ணப்பித்து சம்பந்தப்பட்ட மாணவா்கள் எழுதி விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.